30 வருட யுத்தத்தில் ஊனமற்று சிகிச்சை பெறும் படையினரை ஜனாதிபதி இன்று சந்தித்தார்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார். படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அங்குள்ள படையினர் வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டார். முப்பது வருட யுத்த சூழ்நிலையில் வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, […]









