கனடாவுக்கு சட்டவிரோத பயணம் ; யாழ் இளைஞர்களை மீட்க முனைப்பு காட்டும் அதிகாரி..!
கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்று எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார மேற்கொண்டு வருகிறார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இரண்டு இளைஞர்களையும் கிளிநொச்சியைச்சேர்ந்த ஒருவரையும் கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்ற ஏஜென்சி எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்ததுடன் காணொளி எடுத்து உறவினர்களுக்கும் அனுப்பியிருந்தனர். சம்பந்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் காணொளியை பொலிசாரிடம் கையளித்ததையடுத்து.விசாரணைகளை மேற்கொண்ட வெளிநாட்டமைச்சு அதிகாரிகள் […]









