vice chancellor removal | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்..!

  • May 13, 2026 - 09:37 AM
  • 0 Comments

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்கால நிர்வாக நடவடிக்கைகளுக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் இந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுனில் சாந்தவிடம் ‘அத தெரண’ வினவியது. அதற்குப் பதிலளித்த அவர், இந்த […]

33 reservoirs overflow | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் 33 நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுப்பு..!

  • May 13, 2026 - 09:05 AM
  • 0 Comments

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது பெருக்கெடுத்து வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (13.05.2026) காலை 6.00 மணி நிலவரப்படி இந்தத் தகவல் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். இவ்வாறு பெருக்கெடுக்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, பதுளை மாவட்டத்தின் அம்பேவெல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மௌ-ஆர, லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில யோதவாவி மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்கள் […]

sl weather today 12 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • May 13, 2026 - 09:00 AM
  • 0 Comments

13.05.2026 இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இந்தத் தொகுதி அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதால், நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய […]

mullivaikkal kanji week | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தாயக செயலணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார அனுஸ்டிப்பு ஆரம்பம்…

  • May 12, 2026 - 03:35 PM
  • 0 Comments

மே. 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ம் ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக 2009 இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டதன் நினைவாகவும், குறித்த காலத்தில் தமிழ் மக்கள் பட்ட வேதனைகளை உணரும் விதமாகவும், போர் வலயத்தில் அவர்கள் இன்னுயிரைக் காக்க அருந்திய உப்பில்லாக் கஞ்சியினை நினைவு படுத்தும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் உணர்வுபூர்வமாக மே 12 தொடக்கம் 18 வரையான காலப்பகுதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. அதன் ஆரம்ப நாளான […]

mullivaikkal remembrance week | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிப்பு…

  • May 12, 2026 - 03:21 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் அனுஸ்டிப்பு இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ் உள்ளிட்ட […]

mullivaikkal kanji event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இனப்படுகொலை வாரம் ஆரம்பம்..!

  • May 12, 2026 - 02:40 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சபட்டு முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தலை ஆரம்பித்துள்ளனர். கட்டைக்காடு கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நினைவேந்தலில் வீதியால் சென்றுவரும் அனைவருக்கும் தேங்காய் சிரட்டையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிட தக்கது    

illegal beedi leaves arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகளுடன் இருவர் கைது..!

  • May 12, 2026 - 01:23 PM
  • 0 Comments

கற்பிட்டி – ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கற்பிட்டியின் ஆலங்குடா கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, இரண்டு […]

mullivaikkal rally jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் இருந்து ஆரம்பமான முள்ளிவாய்க்கால் ஊர்தி பவனி..!

  • May 12, 2026 - 01:15 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி இன்றைய தினம்(12.05.2026) செவ்வாய்க்கிழமை காலை நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது. இந்த ஊர்திப் பவணியானது, வட,கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் சென்று மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணை சென்றடைய உள்ளது. அதேவேளை தியாக தீபத்தின் நினைவிடத்தின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/917819587973649

jaffna airport expansion | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

  • May 12, 2026 - 12:57 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் போதே விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது, குறித்த கலந்துரையாடலில், மாணவர் பற்றாக்குறையால் […]

mullivaikkal remembrance pooja | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி சந்நிதியில் பூஜை..!

  • May 12, 2026 - 12:17 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம்(12.05.2026) செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இடம்பெற்றன

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp