உலக வங்கி குழுவினருடன் யாழ் குப்பைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (26-5) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளை விருத்தி செய்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் […]









