investment board sl | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக சுலக்ஷண ஜயவர்தன நியமனம்..!

  • Apr 8, 2026 - 03:09 PM
  • 0 Comments

இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாகச் சேவையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த அனுபவத்தைக் கொண்ட விசேட தர அதிகாரியான கலாநிதி ஜயவர்தன, அரச நிர்வாகம், கொள்கை உருவாக்கம் மற்றும் பாரிய அளவிலான திட்ட முகாமைத்துவம் ஆகியவற்றில் பரந்த அனுபவம் கொண்ட சிரேஷ்ட அரச அதிகாரியாவார். கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன, கொழும்பு 01 இல் உள்ள உலக […]

three wheeler bus | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முச்சக்கரவண்டி பேருந்துடன்மோதியதில் 6 வயது சிறுமி பலி..!

  • Apr 8, 2026 - 03:05 PM
  • 0 Comments

காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ்விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் வெவ்ருகன்னல, சவ்ரித் மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அலீதா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமான செலுத்துகையே இந்த விபத்துக்குக் […]

registration department | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை..!

  • Apr 8, 2026 - 03:01 PM
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வட்ஸ்எப் இலக்கங்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் கும்பல் ஒன்று குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 0115 226 126 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து யாராவது அழைப்புகளை ஏற்படுத்தினால், அவர்களுக்குத் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

tamil area death | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியொன்றில் மரத்திற்கு கீழ் கிடைத்த ஆயுதங்களால் பரபரப்பு..!

  • Apr 8, 2026 - 02:54 PM
  • 0 Comments

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று (08.04.2026) காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 694 துப்பாக்கி ரவைகள், 61 ரக மோட்டார் குண்டுகள் -04, மோட்டார் பியுஸ் -02, மோட்டார் குண்டு சாஜ்ஜர் -06, ஆர்.பி.ஜி.குண்டு -01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையின் உதவியுன் செயழிலக்க செய்வதற்கான […]

jaffna government lands | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில். உள்ள அரச காணிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை..!

  • Apr 8, 2026 - 02:49 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அரச காணிகளை நீண்ட கால குத்தகைக்கு கோரிய சிலரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை வழங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே சில காணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் அரச காணிச் சட்டத்தின் கீழ் நீண்டகால குத்தகையில் காணி வழங்குவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் […]

vaddukoddai | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு..!

  • Apr 8, 2026 - 02:45 PM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், 1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் […]

turf ground | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு விஜயம்..!

  • Apr 8, 2026 - 02:29 PM
  • 0 Comments

சர்வதேச புற்தரைஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அழைப்பின் பெயரில் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் காசிப் பிள்ளை சதீசன் தலைமையில் சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் அவர்கள் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு வரவேற்கப்பட்டார். அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு பல கோடி […]

kottaimunai club | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பிலிக்ஸ் வெற்றிக் கிண்ணம்..!

  • Apr 8, 2026 - 02:23 PM
  • 0 Comments

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இரண்டாவது பிலிக்ஸ் கடினப்பத்து வெற்றிக் கிண்ண நிகழ்விற்கான ஊடக சந்திப்பு கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் உள்ளக மண்டபத்தில் நேற்று (07.04.2026) இடம் பெற்றது. மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் கழகத்தின் வளர்ச்சிக்கு அயராது சேவையாற்றிய தவராசா பிலிக்ஸ் அவர்களின் நினைவாக கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினால் பிலிக்ஸ் சவால் கிண்ணத்திற்கான (Felix challnge trophy 2nd Season) ஊடக சந்திப்பு இடம் பெற்றது. பிலிக்ஸ் […]

elephant incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு..!

  • Apr 8, 2026 - 01:42 PM
  • 0 Comments

தனது வீட்டு முற்றத்தில் வைத்து யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை  அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயான 48 வயது மதிக்கத்தக்க அபூபக்கர் சபீனா […]

journalist al | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மறைந்த ஊடகவியலாளர் ஏ. எல். எம். சலீம் நினைவாக நிந்தவூரில் வீதிக்கு பெயரிட கோரிக்கை..!

  • Apr 8, 2026 - 01:33 PM
  • 0 Comments

மறைந்த சிறந்த ஊடகவியலாளர் “கலாபூசணம்” ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவாக நிந்தவூரில் ஒரு வீதிக்கு அவரது பெயரை சூட்டுமாறு கோரி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்களிடம் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளது. இம்மகஜர் மூலம், ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றி சமூகத்திற்கு சிறப்பான சேவைகளை வழங்கிய ஏ.எல்.எம். சலீம் அவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரின் பெயரை நிலைநிறுத்துவது அவசியம் என சங்கத்தினர் வலியுறுத்தினர். […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊