annai bhoopathy 38 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவேந்தல்..!

  • Apr 20, 2026 - 11:12 AM
  • 0 Comments

தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(19.04.2026) தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அன்னை பூபதி அம்மாவின் பேத்தி கலந்து கொண்டு ஈகைச்சுடரை ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கத்தை செலுத்தினார். தொடர்ந்து , நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

foreigners tamil area | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் வெளிநாட்டவர்களுடன் சுற்றுலா சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!

  • Apr 20, 2026 - 11:05 AM
  • 0 Comments

வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீந்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கட்டுவான் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உறவினர்களுடன்,யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர்களும் நேற்றைய தினம்(19.04.2026) ஞாயிற்றுக்கிழமை கீரிமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடலில் நீராடிய வேளை குறித்த நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து , அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,சில மணி நேரத்தில் காணாமல் […]

jaffna amma statue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்..!

  • Apr 20, 2026 - 10:57 AM
  • 0 Comments

தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

fuel price rise 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த மசகு எண்ணெயின் விலை..!

  • Apr 20, 2026 - 10:48 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 6.5% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 95.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 90.15 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதே, மசகு எண்ணெய் விலை […]

foreigners drugs | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இரு வெளிநாட்டவர் ‘குஷ்’ போதைப்பொருளுடன் கைது..!

  • Apr 20, 2026 - 10:32 AM
  • 0 Comments

பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20.04.2026) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் 30 வயதுடைய யுவதி ஒருவரும் என தெரியவந்துள்ளது. இவர்கள் இந்த போதைப்பொருளை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து கொள்வனவு செய்து, இந்தியாவின் பெங்களூரு நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 […]

ampara incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் காணிச் சமபங்கு அவசியம்..!

  • Apr 20, 2026 - 10:19 AM
  • 0 Comments

சாய்ந்தமருதில் நடைபெற்ற கருத்தாடலில் வலியுறுத்தல் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதி, “அம்பாறை மாவட்டம்: காணிச் சமபங்கு வேண்டும்” என்ற தலைப்பில் சட்டத்தரணிகளான ஆஷிக் அலியார் மற்றும் சர்ஜுன் ஜமால்தீன் ஆகியோர் எழுதிய நூலை மையமாகக் கொண்டு விரிவான கருத்தாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன், ஒன்றியத்தின் முகாமைத்துவ செயலாளர் பிர் முகம்மது தலைமை தாங்கினார். ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் எம்.எம். உதுமாலெப்பையின் நெறிப்படுத்தலில் […]

schools reopen | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்..!

  • Apr 20, 2026 - 10:01 AM
  • 0 Comments

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (20.04.2026) ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்காக இன்று ஆரம்பமாகும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 30 […]

domestic incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கள்ள உறவால் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்..!

  • Apr 17, 2026 - 05:03 PM
  • 0 Comments

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இன்று (17.04.2026) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் வெலிஓயா, UDK பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் பின்னணி: வெளிநாடு சென்றிருந்த இப்பெண், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே கண்டி, கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் […]

kumara power minister | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா..!

  • Apr 17, 2026 - 04:59 PM
  • 0 Comments

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இவர்கள் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் […]

chunnakam police | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுண்ணாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது..!

  • Apr 17, 2026 - 04:17 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனி நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு நடத்தப்படவிருந்த கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியைப் பொலிஸார் சாமர்த்தியமாக முறியடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலும் பொலிஸ் முற்றுகையும் நேற்று (16/04/2026) புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாகச் சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்து அதிரடிச் சோதனையை முன்னெடுத்தனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊