அமெரிக்கா மனித உரிமைகளை மீறி பிரேசில் மக்களை கைவிலங்குடன் நாடு கடத்தியது
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு கிழமை முடிவதற்கு முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் ஜனாதிபதி டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது. நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது அவமதிப்பையும் கடந்து, மனித […]









