chandrasena remand | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கபில சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு..!

  • Apr 28, 2026 - 05:08 PM
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவை, எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

maithri bribery exit | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி..!

  • Apr 28, 2026 - 05:06 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று (28.04.2026) முற்பகல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். அதன்படி, குறித்த வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் அவர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

thaiyiddy vihara survey halt | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரை விவகாரம் – எழுத்து மூல உறுதி மொழிகள் வழங்க முடியாது அதிகாரிகள் திட்டவட்டம் – காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்..!

  • Apr 28, 2026 - 05:03 PM
  • 0 Comments

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு உள்ள உரிமையாளர்கள் 17 பேரினதும் காணிகளின் வரைபடத்தை கீறுவதற்கு அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு அழைக்கப்பட்டனர். அதற்காக விகாரை பகுதிக்கு வந்தவர்களை விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் பொலிஸார் வீதி சோதனை சாவடியை அமைந்து , காணி உறுதிகள் , அடையாள […]

meesalai house handover | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீசாலை பகுதியில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு உரிமையாளரிடம் கையளிப்பு..!

  • Apr 28, 2026 - 05:00 PM
  • 0 Comments

தென்மராட்சிப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு கிராமத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று செவ்வாய்க்கிழமை(28.04.2026) உரிமையாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில், இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 30 வீட்டுத் திட்டங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்திருந்தார் அந்த வருகையின்போது மீசாலை கிழக்கில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி வீட்டிற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்திருந்தார். இந்த நிலையிலேயே கட்டி முடிக்கப்பட்ட […]

military withdrawal temple | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நாச்சிமார் ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம்..!

  • Apr 28, 2026 - 04:38 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்திதிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். இரானும் வெளியேறியதை யாரிடமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்காது திடீரென வெளியேறியுள்ளனர். 25 வருடங்களுக்கு மேலாக குறித்த ஆலயப்பகுதியிலிருந்து நேற்று இராணுவம் வெளியேறியதை தொடர்ந்து அங்கு பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளனர்.

jollykings first place | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவு ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக்கழகம் அதிக தங்கம் வென்று முதலாமிடம்..!

  • Apr 28, 2026 - 04:31 PM
  • 0 Comments

காரைதீவு பிரதேச செயலக கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா 25.04.2026 விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் திரு.G.அருணண் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிவ.ஜெகராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். போட்டி நிகழ்வுகளில் ஆறு கழகங்கள் பங்குபற்றி விளையாட்டுகளில் ஈடுபட்டனர். காரைதீவு வரலாற்றில் JKSC ஜொலிக்கிங்கஸ் விளையாட்டுக் கழகம் 23 தங்கப் பதக்கம் பெற்று முதல் இடத்தை கைப்பற்றிக் கொண்டது. இரண்டாம் இடத்தை KSC காரைதீவு விளையாட்டுக் […]

bogawantalawa bus accident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பொகவந்தலாவை பஸ் விபத்தில் சிக்கி 34 மாணவர்கள் காயம்..!

  • Apr 28, 2026 - 12:44 PM
  • 0 Comments

பொகவந்தலாவ – பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் இன்று (28.04.2026) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிட்டி ரைடர் பேருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது வங்கி ஒன்றில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் காயமடைந்துள்ளதுடன், பேருந்து […]

tamil language identity | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழ் தேசிய இனத்தினுடைய மிகப்பெரிய அடையாளம் மொழி, மொழியை வளர்க்க சன சமூக நிலையங்கள் ஊக்கப் படுத்த வேண்டும்..!

  • Apr 28, 2026 - 12:27 PM
  • 0 Comments

பா. உ. ஸ்ரீதரன். கிளிநொச்சி சோரன்பாற்று சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு  : https://www.facebook.com/reel/1001504999222454

chemmani excavation plan | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்..!

  • Apr 28, 2026 - 11:10 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கை நேற்று (27) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் கட்ட அகழ்வுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அகழ்வு நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நேற்றைய அகழ்வு நடவடிக்கை பணிகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது. நேற்று எந்தவிதமான மனித எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்படவில்லை முதற்கட்டமாக புதைகுழி அமைந்துள்ள பிரதேசத்தை தயார்ப்படுத்தும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டது. நேற்று ஆரம்பமாகியுள்ள மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளுக்கான […]

karaitivu school cultural event | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவு கண்ணகி அறநெறி பாடசாலையின் சித்திரை வருட கலாச்சார நிகழ்வுகள்..!

  • Apr 28, 2026 - 11:04 AM
  • 0 Comments

காரைதீவு முன்னணி கலாச்சார அமைப்பான கண்ணகி அறநெறி பாடசாலையும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் இணைந்து பராபவ புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் V. தயாபரன் அவர்களின்தலைமையில்(26.04.2026) அன்று காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கபடா வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் திரு S.பாஸ்கரன் அவர்களும் சிறப்பு அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திரு P. பிரணவரூபன் மற்றும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp