e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaee0aeb0e0af81e0aea4e0aea9e0aebee0aeb0e0af8de0aeaee0ae9fe0aeaee0af8d e0aea4e0af8be0ae9fe0af8de0ae9f | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்..!

  • Apr 7, 2026 - 05:12 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tamil youth award | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழத்தமிழ் இளைஞருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை..!

  • Apr 7, 2026 - 10:25 AM
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 38 வயதான சுகீர்தன் தங்கராசா என்பவர் போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. கடந்த ஆண்டு புரட்டாதி 15ஆம் திகதி, கிங்ஸ்டன் மயானம் பகுதியில் சிறுவனை நோக்கி ஆபாச மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டிய சம்பவம் தொடர்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பு, ஆவணி மாதம் அவர் தங்கியிருந்த […]

economic slowdown | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உலகப் பொருளாதாரம் மந்தமடையும் என IMF எச்சரிக்கை..!

  • Apr 7, 2026 - 10:11 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு […]

autism awareness | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஓட்டிசம்(AUTISM) சம்மந்தமாக அவதானமாக இருங்கள்..!

  • Apr 6, 2026 - 12:29 PM
  • 0 Comments

கீதாஞ்சலி சத்தியதாஸ் குழந்தை வைத்திய நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலை “JSAC நிறுவனத்தின் உட்படுத்தல் கல்வியை நோக்கிய செயற்பாடுகளின் ஒரு பாகமாக ஓட்டிசம் நோய் தொடர்பான ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இக்கட்டுரையானது பிரசுரிக்கப்படுகிறது.” ஓட்டிசம் என்பது குழந்தைகளின் விருத்தியில் ஏற்படும் ஒரு பின்னடைவு ஆகும்.சமூக நடத்தை மற்றும் தொடர்பாடலில் ஏற்படும் ஒரு பின்னடைவு இந்நோயின் சிறப்பியல்பு ஆகும். இக்குறைபாடு பிறப்பிலேயே உருவாகின்றது. எனினும் பிள்ளை வளரும் போதே குணக்குறிகள் வெளியே புலப்பட ஆரம்பிக்கும். இதனை முற்கூட்டியே […]

npp party | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கும் மஹிந்த கம்பனிக்கு இடையேயும் வேறுபாட்டை காணமுடியாமல் உள்ளது..!

  • Apr 6, 2026 - 10:02 AM
  • 0 Comments

கடந்த. ஜனாதிபத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பன இடம்பெற்ற காலத்தில் தற்போதைய ஆட்சியாளர்களால் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளமை வேதனையளிக்கும் விடயமாகும். அதில் ஒன்றுதான் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவோம் என்பதாகும். ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றமை பொதுமக்களின் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும். இவ்வாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் குறிப்பிட்டார். இத் தொழிற்சங்கத்தின் உயர்பீட கூட்டம் நேற்றைய தினம் […]

sammanturai development | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டி மண்ணின் முதல் பொறியியலாளர்..!

  • Apr 6, 2026 - 10:00 AM
  • 0 Comments

இவ்வாண்டில் வெளியாகிய கல்வி பொது உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டியை சேர்ந்த திரு. திருமதி. இரவிச்சந்திரன் மனோகரி தம்பதிகளின் புதல்வன் செல்வன் பவதாருணன் அவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அம்பாறை மாவட்டத்தில் 14வது இடத்தையும் தேசிய மட்டத்தில் 840 வது இடத்தையும் பெற்று புதிய வளத்தாப்பிட்டி வரலாற்றில் முதல் பொறியியல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை கிராமத்துக்கும் எதிர்கால கல்வி சமுதாயத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன், புதிய வளத்தாப்பிட்டி […]

dry season | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வறட்சியான இந்தக் காலப்பகுதியில் வெப்பத் தாக்கத்தை தவிர்க்க போதியளவு நீரை அருந்துங்கள்..!

  • Apr 2, 2026 - 01:56 PM
  • 0 Comments

பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். முழங்காவில் இரணைமாதாநகர் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தமர்விலேயே அவர் மேற்படி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போது வறட்சியானதும்- அதிக வெப்பமானதுமான காலநிலை நிலவுவதோடு இது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் வெப்பத்தாக்கம்(Heat Stroke) ஏற்படுவதைத் தடுக்க சுத்தமான நீரை போதியளவு அருந்த வேண்டும். வெப்பத்தாக்கம்(Heat stroke) ஏற்படுவதற்கான அறிகுறிகளாக தீவிர தலைவலி, மயக்கம், வாந்தி, […]

trincomalee spiritual head | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருமலையில் ஆன்மீகத் தலைவர்களை சந்தித்த சிறீதரன் MP…..!

  • Apr 2, 2026 - 01:25 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், நேற்றைய தினம்(01.04.2026) திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் (Rt. Rev. Dr. Christian Noel Emmanuel) ஆண்டகை மற்றும் தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆகியோரைச் சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடினர். ​திருகோணமலை மறைமாவட்ட ஆயர் இல்லம் மற்றும் கன்னியா, […]

student physical harm | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது..!

  • Apr 2, 2026 - 01:14 PM
  • 0 Comments

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சால், இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட, 2016 ஏப்ரல் 29 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்குக் மேலதிகமாக, இந்தச் சுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறித்த சுற்றறிக்கையில் […]

jaffna 1134 acres | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில்.1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள்..!

  • Apr 2, 2026 - 11:51 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊