உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் பெக்கோ டிரெயில் உலகின் சிறந்த சுற்றுலாத் தளமாக தெரிவு

  • Mar 14, 2025 - 12:38 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 சுற்றுலாத் தளங்களின் பட்டியலை ‘டைம்’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ‘பெக்கோ டிரெயில்’ முதலிடம் பிடித்துள்ளது. ‘பெக்கோ டிரெயில்’ என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டின் வழியாக 300 கிலோமீட்டர் ஒரு தொலைதூரப் நடைப்பயணமாகும். இந்த 22 நிலை நடைப்பயணமானது ஆசியாவின் தெற்கில் உள்ள மிகச்சிறந்த சூழலியல் மற்றும் மலைப் பகுதிகள் வழியாக அழைத்துச் செல்லும். நடைப்பயணம் கண்டியில் இருந்து ஆரம்பித்து ஹப்புத்தளை, எல்ல வழியாக நுவரெலியாவுக்குச் செல்கிறது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தமிழரசுக்கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

  • Mar 14, 2025 - 12:28 PM
  • 0 Comments

வவுனியா நகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைய, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய […]

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்

  • Mar 6, 2025 - 09:17 AM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா நேற்று இரவு (05- 03-2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை நிராகரித்துள்ளது

  • Mar 4, 2025 - 12:37 PM
  • 0 Comments

மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்துதல் மற்றும் அதன் பின்னர் நமது பல தசாப்த கால ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப கண்ணியமான மாற்றம் என்ற மாதிரியின்படி, கடந்த […]

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கில் 200 கிலோ கஞ்சா கைப்பற்றல் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கில் 200 கிலோ கஞ்சா கைப்பற்றல்

  • Mar 4, 2025 - 12:09 PM
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று செவ்வாய்க்கிழமை (04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டன. இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள கஞ்சா முதலில் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக 200 கிலோ கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக யாரும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பராலைட் வெடித்து இளைஞர் காயம்!

  • Mar 3, 2025 - 10:57 PM
  • 0 Comments

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி திருநீற்றுக்கேணி கடற்கரைப் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கடற்கரையில் இன்று மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் கடலில் மர்மப் பொருள் ஒன்று மிதப்பதைக் கண்டு அதை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதன்போது குறித்த மர்மப் பொருள் வெடித்ததில் 25 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிஸார் குறித்த மர்மப்பொருள் பராலைட் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹட்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!

  • Mar 3, 2025 - 10:37 PM
  • 0 Comments

ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் இன்றுஇரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மின்சாரக் கசிவு என சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்தில் தொழிலாளர்களின் உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளன

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரமழான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்பின் போது சுகாதாரத்தை பேணுவது தொடர்பான கலந்துரையாடல் சாய்ந்தமருதில் நடைப்பபெற்றது

  • Mar 2, 2025 - 04:47 PM
  • 0 Comments

ரமழான் காலத்தில் விசேடமாக தயார் செய்யப்படும் நோன்புக்கஞ்சி உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (1-03-2025) நடைபெற்றது. இக்கலந்துரையாடலானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர். ஜே. மதன் தலைமையில் நடைபெற்றது. சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருமான வைத்தியர் சனூஸ் காரியப்பர் இ சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ஏ.எல்.எம்.சலீம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவனின் ‘வீட்டை காணொளியாக பதிவு செய்தவருக்கு விளக்கமறியல்

  • Feb 28, 2025 - 01:00 PM
  • 0 Comments

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரின் மனைவியின் வீட்டை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி நீதவான் ரன்திக லக்மாலி நேற்று (27-02-2025) உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் நீதிமன்றி்ல ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் துபாயில் உள்ள ‘சமீர்’ […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வீட்டு உணவுண்ண எனக்கு அனுமதியளிக்கவில்லை சிறைச்சாலை உணவையே உண்டேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

  • Feb 27, 2025 - 05:22 PM
  • 0 Comments

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp