முக்கிய செய்திகள்

அமெரிக்க வீசா தொர்பில் அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது

  • Feb 6, 2025 - 06:30 AM
  • 0 Comments

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஏகுளு கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது. தாமதங்களைத் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் வாய்தர்க்கம் கொலையில் முடிந்தது

  • Feb 5, 2025 - 06:14 PM
  • 0 Comments

மட்டக்கயப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (04-02-2025) இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன. ஓமனியாமடு கிராமத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார். சடலமானது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள […]

முக்கிய செய்திகள்

மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் 

  • Feb 1, 2025 - 07:28 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு எழுத்து மூலம் இது வரை அநுர அரசு அறிவிக்கவில்லை. எனவே அவரை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற்றுவதற்காக புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு சுனில் வட்டகல வேண்டுகோள் விடுத்துள்ளார்     […]

முக்கிய செய்திகள்

நிராயுதபாணியானார் மகிந்தவின் 2வது புத்தா யோசித்த

  • Feb 1, 2025 - 07:14 PM
  • 0 Comments

அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி யோசித ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகளை ஆரம்ப கட்டத்தில் ஒப்படைத்திருந்தார் இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இளைஞரின் சடலம் மீட்பு

  • Jan 27, 2025 - 05:51 PM
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று திங்கட்கிழமை (27) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழப்பு

  • Jan 26, 2025 - 04:36 PM
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் – புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில் நேற்று (25) இழுத்து செல்லப்பட்டு காணாமல்போன இருவரும் இன்று (26) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு, வாழைச்சேனை சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 71, மற்றும் 52 வயதுதுடைய உடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.    

முக்கிய செய்திகள்

புலிகளின் மீள செயற்படும் சாத்தியமிருப்பின நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு மஹிந்தவிடம் அரசாங்கம் வலியுறுத்தல்

  • Jan 26, 2025 - 06:08 AM
  • 0 Comments

மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடி எழுச்சி பெறுவது தொடர்பான தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி வசம் இருக்குமாயின் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் […]

முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 2வது நாளாக தொடர்கின்றது

  • Jan 25, 2025 - 06:49 PM
  • 0 Comments

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் […]

முக்கிய செய்திகள்

மகிந்தவின் 2 வது புத்தாவுக்கு 27 ம் திகதி வரை விளக்கமறியல்

  • Jan 25, 2025 - 06:27 PM
  • 0 Comments

யோசித ராஜபக்ஸவை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீதவான் உத்தரவிட்டார். பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஸ இன்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார். ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோசித […]

முக்கிய செய்திகள்

அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பிலான மனுவை மகிந்த தாக்கல் செய்துள்ளார்

  • Jan 24, 2025 - 04:33 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மகிந்த தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் மீண்டும் தனது பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60ஆக அரசாங்கம் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp