first school term | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாடசாலைைளுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு..!

  • Apr 10, 2026 - 09:49 AM
  • 0 Comments

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10.04.2026) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

sl weather 18 4 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 10, 2026 - 09:46 AM
  • 0 Comments

10.04.2026 மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய […]

59th new rice festival | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது..!

  • Apr 9, 2026 - 11:21 AM
  • 0 Comments

09.04.2026 மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எமது கலாசாரத்தின் பெரும் பகுதியாக விவசாயம் பின்னிப்பிணைந்துள்ளதாகத் தெரிவித்தார். புத்தரிசி விழா அதன் உச்சகட்ட பலனாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் அடையாளமும் கலாசாரமும் இதன் மூலம் பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார். கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே தமது நோக்கம் […]

backhoe bus incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பெக்கோ இயந்திரம் அரச பேருந்துடன் மோதியதில் 10 பயணிகள் காயம்..!

  • Apr 9, 2026 - 10:58 AM
  • 0 Comments

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (09.04.2026) அதிகாலை 1:30 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி வீதியின் குறுக்கே சென்ற பெக்கோ இயந்திரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

mannar agriculture | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்..!

  • Apr 9, 2026 - 10:22 AM
  • 0 Comments

மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று(08.04.2026) மாலை 2.30 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்ற நிலை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதேவேளை, மாவட்ட விவசாயப் பிரிவின் தற்போதைய செயற்பாடுகள், விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. மேலும், மத்திய மற்றும் மாகாண […]

police bribery | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அன்பளிப்பு வாங்கும் பொலிசாருக்கு இனி ஆப்பு: பொலிஸ் நிலையங்களுக்கு பறந்த உத்தரவு..!

  • Apr 9, 2026 - 10:11 AM
  • 0 Comments

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு உபசரிப்புகளை நடத்துவதற்காக உத்தியோகத்தர்களிடம் பணம் வசூலிக்கத் தயாராகி வருவதாகவும், வர்த்தக சமூகத்தின் பங்களிப்புடன் புத்தாண்டு விருந்துகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்தே இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. விசேடமாக, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் […]

48h strike | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் அரச வைத்தியர்கள்..!

  • Apr 9, 2026 - 09:52 AM
  • 0 Comments

நாடு முழுவதிலும் இன்று (09.04.2026) காலை 8 மணி முதல் 48 மணிநேரத்திற்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்திய பயிற்சியாளர்களின் நியமனங்களை வழங்குவது தொடர்பாக, சுகாதார அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி செயற்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

tamil area death | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியொன்றில் மரத்திற்கு கீழ் கிடைத்த ஆயுதங்களால் பரபரப்பு..!

  • Apr 8, 2026 - 02:54 PM
  • 0 Comments

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று (08.04.2026) காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 694 துப்பாக்கி ரவைகள், 61 ரக மோட்டார் குண்டுகள் -04, மோட்டார் பியுஸ் -02, மோட்டார் குண்டு சாஜ்ஜர் -06, ஆர்.பி.ஜி.குண்டு -01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையின் உதவியுன் செயழிலக்க செய்வதற்கான […]

owner body incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உணவளித்த எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகள்..!

  • Apr 8, 2026 - 01:13 PM
  • 0 Comments

மன்னார் – நறுவிலிகுளத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காளைகளின் எஜமான் இயற்கை எய்திவிட்டார். தான் இறந்தால், தனது உடலை காளைகள் பூட்டிய தனது மாட்டு வண்டியிலேயே எடுத்து செல்ல வேண்டும் என்பது அவனது கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அவரது இறுதி ஊர்வலமானது அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு காளைகள் பூட்டிய வண்டிலிலேயே இடம்பெற்றது. எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகளின் முகத்திலும் சோக […]

security issues | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் கூடியது..!

  • Apr 8, 2026 - 10:04 AM
  • 0 Comments

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் (07.04.2026) பாராளுமன்றத்தில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும், வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் போதும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போதும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp