உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்..!

  • Apr 7, 2026 - 10:16 AM
  • 0 Comments

சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார் 250 பேருந்துகள் வரை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் பல பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தவும் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

  • Apr 7, 2026 - 09:44 AM
  • 0 Comments

07.04.2026 வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிவக்கூடும். இடியுடன் கூடிய மழை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொத்து, ப்ரைட் ரைஸ் பிரியர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி..!

  • Apr 6, 2026 - 11:22 AM
  • 0 Comments

இன்று (06.04.2026) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலைகள் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்‌ஷன் தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் விலை குறைவடைந்தமையினால் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை..!

  • Apr 6, 2026 - 11:10 AM
  • 0 Comments

பனாமுறை, வேஅதுர பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வேஅதுர, பனாமுறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (05.04.2026) இரவு அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த இருவர் அவரை தாக்கியதுடன், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தற்காலிகமாக இடைநிறுத்தபட்ட அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு..!

  • Apr 6, 2026 - 10:05 AM
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (06.04.2026) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று அறிவித்திருந்தார். உலக சுகாதார […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

2026 இலும் தோல்வியில் சென்னை அணி..!

  • Apr 6, 2026 - 09:53 AM
  • 0 Comments

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய (05.04.2026) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டிம் டேவிட் 25 […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 6, 2026 - 09:47 AM
  • 0 Comments

06.04.2026 வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் (ETRA) வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக துரைராசா கஷேந்திரன் (கஜன்) நியமனம்..!

  • Apr 2, 2026 - 09:22 AM
  • 0 Comments

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் (ETRA) வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக துரைராசா கஷேந்திரன் (கஜன்) அவர்களை நியமித்துள்ளதாக ஈழ தமிழர் பெருமன்றம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம்(01.04.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடபட்டுள்ளது. ஈழத்தமிழர் தாயகத்தில் நீண்டகாலமாக செயற்பட்டுவந்த ஊடகவியலாளரும், குடிசார் சமூக செயற்பாட்டாளரும், ஆசிரியருமான துரைராசா கஷேந்திரன் ETRA வின் வட அமெரிக்கத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கனடா, அமெரிக்கா வாழ் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களது அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும், அறியத்தருகிறோம். யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாயைச் சேர்ந்தவர். முல்லைத்தீவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவிப்பு..!

  • Apr 1, 2026 - 10:50 AM
  • 0 Comments

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31.03.2026) வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கமைய மாணவர்கள் அந்தந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மன்னாரில் பனைத் தோப்பில் பாரிய தீப்பரவல்..!

  • Apr 1, 2026 - 09:51 AM
  • 0 Comments

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பனைத் தோப்பொன்றில், நேற்று (31) காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. எனினும், இச்சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களோ அல்லது வீடுகளுக்கோ, ஏனைய சொத்துக்களுக்கோ பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தலைமன்னார் பொலிஸார், செல்வேரி இராணுவ முகாம் இராணுவத்தினர், […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp