e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aeb5e0aebfe0aeb0e0af8be0aea4e0aeaee0aebee0ae95 e0ae85e0ae95e0aeb4e0af8de0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae88e0ae9f | Pathivu News உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்ட 7 சந்தேகநபர்கள் கைது !

  • Jan 5, 2025 - 11:20 PM
  • 0 Comments

பழங்காலப் பொருட்களை திரட்டும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு மேற்கொண்ட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அட்டுலுகம மற்றும் மீவலகந்த பகுதிகளில் நடைபெற்ற அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. அதில், 25 முதல் 56 வயதிற்கு இடையிலான சீதுவ மற்றும் தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்தில், பூஜை பொருட்கள் மற்றும் அகழ்வு பணியில் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக […]

e0aeafe0aebee0aeb4e0af8d e0ae8ae0aeb0e0af8de0ae95e0aebee0aeb5e0aeb1e0af8de0aea4e0af81e0aeb1e0af88 e0aeaae0ae9fe0ae95e0af81 e0aea4 | Pathivu News செய்திகள்

யாழ் ஊர்காவற்துறை படகு திருத்தும் நிலையத்தை அமைச்சர் சந்திரசேகர் பார்வையிட்டார்

  • Jan 4, 2025 - 10:51 AM
  • 0 Comments

யாழ். ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்று (03) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் ஊர்காவற்துறை இறங்கு துறையை பார்வையிட்டதுடன் ஊர்காவற்துறையில் அமைந்துள்ள படகு திருத்தும் நிலையத்தையும் பார்வையிட்டனர். அந்த படகு திருத்தும் நிலையமானது; செயலிழந்து காணப்படுகிறது. அந்த படகு திருத்தும் நிலையத்தை இயங்க வைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் இதன் போது உறுதியளித்துள்ளார்    

31e0ae86e0aeaee0af8d e0aea8e0aebee0aeb3e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0ae9ee0af8de0ae9ae0aeb2e0aebf | Pathivu News நினைவஞ்சலி

31ஆம் நாள் நினைவஞ்சலி!

  • Jan 3, 2025 - 10:53 PM
  • 0 Comments

அன்புடையீர்! 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதமடைந்த எமது குடும்ப விளக்கு                                 அமரர். எலியஸ் அப்புகாமி அலிஸ்னோனா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 07.01.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அத்தருணம் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். தகவல் -லோகநாதன் பார்வதி குடும்பம்,காரைதீவு https://pathivunews.com/ https://www.youtube.com/@pathivunews/videos

e0aea4e0aeaee0aebfe0aeb4e0af80e0aeb4 e0aeb5e0aebfe0ae9fe0af81e0aea4e0aeb2e0af88e0aeaae0af8d e0aeaae0af81e0aeb2e0aebfe0ae95e0aeb3e0af8d | Pathivu News கட்டுரை

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்…!

  • Jan 2, 2025 - 01:16 AM
  • 0 Comments

  தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்…! தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும். எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அதே தமிழர்கள் எழுச்சியடைந்தர்களோ அந்த மொழியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் மூர்க்கத்தனமான ஓர்மத்தினைக் கொண்டிருந்தார்கள். போர்க்களமும் பங்கர் வாழ்க்கையும் மட்டும் தமது குறிக்கோளை எட்டிவிடுவதற்கு துணை நிற்கப்போவதில்லை என்பதை […]

e0aea8e0aebee0ae99e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaae0aebfe0aeb0e0aebfe0aeb5e0aebfe0aea9e0af88e0aeb5e0aebee0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல – இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்!

  • Jan 1, 2025 - 02:36 AM
  • 0 Comments

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுர குமார திசாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் தெரிவித்தார். யாழில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சி.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்கனவே இருப்பவர்களுக்கு மட்டும்தான் கட்சி வாய்ப்பு அளிக்கும் என்ற கருத்து இருப்பதால் […]

e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aea8e0ae9fe0af88e0aeaae0af86e0aeb1e0af8de0aeb1 | Pathivu News உள்ளூர் விளையாட்டு

கிளிநொச்சியில் நடைபெற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி:புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது!

  • Jan 1, 2025 - 01:57 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய சுழற்சி மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டியில் புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது. மேற்படி போட்டியானது 29-12-2024 ஆம் திகதி பி. ப 6.00 மணிக்கு ஆதவன் விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.   5 சுற்றுக்களை கொண்ட போட்டியில் புதியபாரதி எதிர் குறிஞ்சி அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிட்டு 3-0 என்ற […]

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb9e0af86e0aeb0e0af8be0aeafe0aebfe0aea9 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பாவனை அதிகரித்துள்ளதா?

  • Dec 27, 2024 - 10:45 PM
  • 0 Comments

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (27) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வைத்து 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

e0aeb5e0aeb5e0af81e0aea3e0aea4e0af80e0aeb5e0af81e0ae9ae0aebfe0aeaae0af8de0aeaae0aebfe0aeaee0ae9fe0af81 e0aeaae0ae95e0af81e0aea4e0aebf | Pathivu News உள்ளூர் செய்திகள்

வவுணதீவு,சிப்பிமடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • Dec 27, 2024 - 03:05 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை காலை வீட்டிலிருந்து சென்றவர் இதுவரையில் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேடியுள்ள நிலையில் சடலமாக குறித்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த பகுதிக்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் […]

e0ae9ae0af86e0ae9fe0af8de0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0af81e0aeb3e0aeaee0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0af87e0ae9a e0ae9ae0af86e0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள்

செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

  • Dec 27, 2024 - 02:39 AM
  • 0 Comments

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. செட்டிக்குளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட காணிப் பிரச்சினைகள், சுகாதார வைத்திய சேவை, கல்வி, பொருளாதார அபிவிருத்தி, மேய்ச்சல் தரை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வருகைதந்த கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், […]

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0aeaee0aebee0aea3e0aeb5e0aea9e0af8d e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1e0aebee0aeb0e0af8d | Pathivu News விளையாட்டு

வவுனியா மாணவன் வென்றார் வெள்ளி பதக்கம்

  • Dec 26, 2024 - 10:26 AM
  • 0 Comments

இளையோருக்கான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் வு.தரனிதரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் கடந்த 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இளையோருக்கான குத்துச்சண்டை போட்டி கண்டியில் நடைபெற்றது. இதன்போது 69 – 71 மப எடைப்பிரிவில் போட்டியிட்ட தரனிதரன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp