உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை, ஆலையடிவேம்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 லீற்றர் டீசலை பதுக்கிய ஊழியர் கைது..!

  • Mar 24, 2026 - 09:39 AM
  • 0 Comments

அம்பாறை, ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசலைக் கண்டுபிடித்து மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு கடமையாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள்..!

  • Mar 24, 2026 - 09:37 AM
  • 0 Comments

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24.03.2026) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 24, 2026 - 09:28 AM
  • 0 Comments

24.03.2026 மேல், தென், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சலே கைதுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு: புரட்டாதி 25 இல்..!

  • Mar 23, 2026 - 01:30 PM
  • 0 Comments

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அனுமதி கிடைத்தவுடன் பேருந்து கட்டணங்கள் அறிவிக்கப்படும்..!

  • Mar 23, 2026 - 12:25 PM
  • 0 Comments

இன்றைய தினம் (23.3.2026) ஒரு சில பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பல பிரதேசங்களில் பேருந்து சேவைகளில் வீழ்ச்சி காணப்படுவதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா தெரிவித்துள்ளார். அதிவேக வீதிகளின் பேருந்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதால், பயணிகள் சாதாரண வீதிகள் ஊடாகப் பயணிக்க முற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான அனைத்துப் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையில் பாரிய குறைபாடு நிலவுவதாகவும் அவர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸார் விளக்கம்..!

  • Mar 23, 2026 - 10:29 AM
  • 0 Comments

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. “நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் அவதானத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனப் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது போல் அமைந்துள்ள அந்தச் செய்தி, எவ்வகையிலும் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டது அல்ல என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் தரப்பிலிருந்து […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத பொருட்களுடன் ஐவர் கைது..!

  • Mar 23, 2026 - 09:57 AM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் 5 பயணிகள் இன்று (23.03.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் […]

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 23, 2026 - 09:33 AM
  • 0 Comments

23.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை..!

  • Mar 20, 2026 - 01:41 PM
  • 0 Comments

இலங்கை வாழ். முஸ்லிம்கள் நாளை (21.03.2026) நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று (20.03.2026) காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏற்றுமதிக்கு அதிக முன்னுரிமை..!

  • Mar 20, 2026 - 09:58 AM
  • 0 Comments

ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வலியுறுத்தல் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் நேற்று (19.03.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp