உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை, ஆலையடிவேம்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 லீற்றர் டீசலை பதுக்கிய ஊழியர் கைது..!

அம்பாறை, ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசலைக் கண்டுபிடித்து மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக அங்கு கடமையாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்