களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம், குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கே இப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் சார்பில் யு.ஆ.ஆ. ரவூப், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவ இடத்தில் […]