sl weather 3 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Apr 13, 2026 - 09:38 AM
  • 0 Comments

13.04.2026 மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று (13.04.2026) காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம். […]

sl q1 2026 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் 2026 ன் முதல் காலாண்டில் வரி வருமானம் 606 பில்லியன்..

  • Apr 10, 2026 - 03:27 PM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 606,002 மில்லியன் ரூபாய் வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத வளர்ச்சியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த வருமானத்திற்கு வருமான வரி, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT),சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி உட்பட அனைத்து வரிகளும் பங்களிப்பு செய்துள்ளன. 2026 ஆம் ஆண்டிற்கான இலக்கு வைக்கப்பட்ட வரி வருமானத்தில் 25 சதவீதத்தை முதல் […]

kilinochchi liquor | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது..!

  • Apr 10, 2026 - 12:58 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , தர்மபுரம் பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் மதுபான போத்தலை லஞ்சமாக வாங்கிய வேளை கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விசாரணைகளின் பின் , கிளிநொச்சி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

saanakkiyan mp | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இரா. சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியால் சபையில் சிறுபரபரப்பு..!

  • Apr 10, 2026 - 12:53 PM
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (10.04.2026) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, இரா. சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியால் சபையில் சிறுபரபரப்பு ஏற்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘அஸ்வெசும’ நலத்திட்டம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பிலும், அங்கு மீன்பிடித்துறை அமைச்சரால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்தும் சாணக்கியன் எம்.பி. இதன்போது கருத்து வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எழுந்து விளக்கமளித்தார். அமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த சாணக்கியன் எம்.பி., “நான் அமைச்சரின் பெயரைக் […]

battaramulla incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பத்தரமுல்லை பகுதியில் வாகன நெரிசல்..!

  • Apr 10, 2026 - 12:48 PM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக பொல்துவ சந்திப்பகுதியில் இருந்து பாராளுமன்றம் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

59th new rice festival | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது..!

  • Apr 9, 2026 - 11:21 AM
  • 0 Comments

09.04.2026 மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எமது கலாசாரத்தின் பெரும் பகுதியாக விவசாயம் பின்னிப்பிணைந்துள்ளதாகத் தெரிவித்தார். புத்தரிசி விழா அதன் உச்சகட்ட பலனாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் அடையாளமும் கலாசாரமும் இதன் மூலம் பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார். கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே தமது நோக்கம் […]

millet foundation tn | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழ்நாடு “மில்லட் பவுண்டேசன்” நிறுவனத்தின் தாபகர் டாக்டர் எஸ்.சுந்தர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு விஜயம்..!

  • Apr 9, 2026 - 09:34 AM
  • 0 Comments

நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கிலும் பங்கேற்பு. அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்தியா, தமிழ்நாட்டை சேர்ந்த “மில்லட் பவுண்டேசன் நிறுவனத்தின் தாபகர் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரியுமான டாக்டர் எஸ்.சுந்தர் நேற்றைய தினம் (08.04.2026) அக்கரைப்பற்று ஆலையடிவேம்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் ஆர் திரவியராஜ். தலைமையில் இடம்பெற்ற நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டதுடன் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் மூலம் வலுவூட்டி அவர்களை […]

registration department | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை..!

  • Apr 8, 2026 - 03:01 PM
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வட்ஸ்எப் இலக்கங்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் கும்பல் ஒன்று குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 0115 226 126 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து யாராவது அழைப்புகளை ஏற்படுத்தினால், அவர்களுக்குத் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

tamil area death | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியொன்றில் மரத்திற்கு கீழ் கிடைத்த ஆயுதங்களால் பரபரப்பு..!

  • Apr 8, 2026 - 02:54 PM
  • 0 Comments

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து இன்று (08.04.2026) காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 694 துப்பாக்கி ரவைகள், 61 ரக மோட்டார் குண்டுகள் -04, மோட்டார் பியுஸ் -02, மோட்டார் குண்டு சாஜ்ஜர் -06, ஆர்.பி.ஜி.குண்டு -01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையின் உதவியுன் செயழிலக்க செய்வதற்கான […]

service standard draft | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

புதிய சேவைப் பிரமாண வரைபு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிப்பு..!

  • Apr 8, 2026 - 01:19 PM
  • 0 Comments

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் நேரடிப் பங்கேற்புடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (EDO/CDO) ஆகியோரின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய சேவைப் பிரமாண வரைபு நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. முக்கிய சந்திப்புகள் மற்றும் கையளிப்பு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், கொழும்பில் உள்ள முக்கிய அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு நேரில் சென்று இந்த வரைபினை கையளித்தனர் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம்: நாட்டின் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp