இரத்தப் பரிசோதகரை மாற்ற வேண்டாம் அச்சுவேலி மக்கள் ஆர்ப்பாட்டம்.
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை தெல்லிப்பழைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஆய்வுக்கூடத்தில் இரத்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இந்த பணிமாற்ற உத்தரவு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெற்றிடத்துக்கு புதிதாக ஒருவரை நியமிக்க இரண்டு மாதங்களுக்கு மேலாகும் என கூறப்பட்டுள்ளது.ஆகவே இரத்த பரிசோதனைக்கு வேறிடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் அல்லது; பணம் கொடுத்து; பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அச்சுவேலி வைத்தியசாலையில் டெங்கு […]









