e0aea8e0aeb5e0aeaee0af8de0aeaae0aeb0e0af8d e0aeaee0aebee0aea4e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0aeaee0af81e0aea4e0aeb2e0af8d | Pathivu News செய்திகள்

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

  • Nov 7, 2024 - 05:17 PM
  • 0 Comments

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்தியாவில் இருந்து மட்டும் 7785 சுற்றுலாப் பயணிகளும்,ரஷ்யாவிலிருந்து 4,488 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,752 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,821 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,227 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,076 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை […]

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaee0aea9e0af88e0aeb5e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aea4e0aebe | Pathivu News உள்ளூர்

வவுனியாவில் மனைவியின் தாயின் வாயில் வெடி வைத்தார் மருமகன்

  • Nov 5, 2024 - 09:09 PM
  • 0 Comments

  வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடியன் துவக்கு என அழைக்கப்படும் நாட்டு துப்பாக்கியுடன் மாமியின் வீட்டிற்கு சென்ற மருமகன் மாமியில் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளாhர். படுகாயமடைந்த 54 வயதுடைய பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாhர் சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்  

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0aeaae0aebee0aea4e0af81e0ae95e0aebee0aeaae0af8de0aeaae0af81 e0aeaae0aeb2e0aeaa | Pathivu News செய்திகள்

மன்னாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மக்களையும் சோதனைக்குட்படுத்தினர்

  • Nov 4, 2024 - 03:28 PM
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (4) காலை மன்னாருக்கு விஜயம் செய்தார். பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் கூட்டத்தில் பரப்புரை செய்யவே அங்கு சென்றார் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதன் போது ஜே.வி.பி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்டவர்  கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் […]

e0aeb2e0af8ae0aeb9e0aebee0aea9e0af8d e0aeb0e0aea4e0af8de0aeb5e0aea4e0af8de0aea4e0af87e0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaee0aea9e0af88e0aeb5 | Pathivu News செய்திகள்

லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கம்பி எண்ணுகிறார்.

  • Nov 4, 2024 - 01:15 PM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்த அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவுடுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது கைது […]

e0ae9ae0af81e0aeaee0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0ae95 e0ae9ae0aebe | Pathivu News செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

  • Nov 4, 2024 - 11:18 AM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தன் மீது அவதூறு பரப்பும் வகையிலான கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (3) மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதனை அதை தான் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதாகவும் தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் கூறியதாக சால்ஸ் கவலை […]

e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88 e0aeaee0af80e0aea9e0aeb5e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95 | Pathivu News செய்திகள்

திருகோணமலை மீனவர்களுக்கு இந்தியா வாழ்வாதார உதவிகளை வழங்கியது.

  • Nov 4, 2024 - 10:57 AM
  • 0 Comments

  இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்த இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் இந்தியா வழங்கி வைத்துள்ளது. திருமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03) திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்க கட்டடத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டார்.  

e0ae88e0aeb4e0aea4e0af8d e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0aebee0aea9 e0aea8e0aebfe0aeb0e0aea8e0af8de0aea4e0aeb0 | Pathivu News செய்திகள்

ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு பொது வாக்கெடுப்பு விஜய் கட்சி தீர்மானம்.

  • Nov 3, 2024 - 05:34 PM
  • 0 Comments

இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என த.வெ.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்ட்டுள்ளது ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என த.வெ.க. செயற்குழு இன்று கூடிய போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது என த.வெ.க. செயற்குழு குற்றம் சுமத்தியுள்ளனர் இரு நாடுகளுக்கு இடையிலான […]

e0ae9ce0af87e0aeb5e0aebfe0aeaae0aebf e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aea9e0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0af8d e0aeb5e0aebe | Pathivu News செய்திகள்

ஜேவிபி அரசின் பிரதமர் வாக்கு வேட்டைக்காக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

  • Nov 2, 2024 - 04:58 PM
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரதேசத்தில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு’ எனும் கருப்பொருளில் பொதுக்கூட்டத்தில் பரப்புரையாற்ற பிரதமர் வருகை தரவுள்ளார். நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி மூலம் துப்பரவு செய்யும் பணி விரைவாக நடைபெறுவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார் தேசியமக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தினை விளம்பரப்படுத்த […]

e0ae9ae0af81e0aeaee0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeb5e0af86e0aeb3e0aebfe0aeb5e0aebfe0aeb5e0ae95 | Pathivu News செய்திகள்

சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க ஜனாதிபதி இணக்கமாம் உதய கம்மன்பில தெரிவிப்பு

  • Nov 2, 2024 - 10:55 AM
  • 0 Comments

  இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய ஜேவிபி அரசுடன் இணையுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் […]

e0ae95e0ae9fe0aea9e0af81e0aeaee0af8d e0aeb5e0aebee0ae99e0af8de0ae95e0aeb5e0aebfe0aeb2e0af8de0aeb2e0af88 e0ae95e0aebee0ae9ae0af81e0aeae | Pathivu News செய்திகள்

கடனும் வாங்கவில்லை காசும் அடிக்கவில்லை- விஜித ஹேரத்

  • Oct 29, 2024 - 01:37 PM
  • 0 Comments

    சமூக ஊடகங்களில் அரசு கடன் பெற்றதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன் புதிய நாணயத்தாள்களையும் அச்சிடவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேஇதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp