e0ae9ae0aeb0e0af8de0aeb5e0aea4e0af87e0ae9a e0aea8e0aebee0aea3e0aeaf e0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0aea4e0af8de0aea4e0aebfe0aea9 2 | Pathivu News செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளது- அரசாங்கம்

  • Dec 5, 2024 - 02:33 PM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். ‘அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்தத் திருத்தங்களின் விடயங்களை […]

e0ae85e0aeb0e0ae9ae0aebee0ae99e0af8de0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0ae87e0ae9fe0af88e0ae95e0af8de0ae95e0aebee0aeb2 e0aea8 | Pathivu News செய்திகள்

அரசாங்கத்தின் இடைக்கால நிதிப்பங்கீடாக 9 இலட்சத்து 60 கோடியே 500 கோடி ரூபா ஒதுக்கீடு

  • Dec 5, 2024 - 08:42 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசின் 2025 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான ஒதுக்கீடாக 9,60,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கென 20 ஆயிரத்து 801 கோடியே 95 இலட்சத்து 75000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்காக 16199 கோடியே 99,98000 ரூபாவும் கல்வி,உயர்கல்வி அமைச்சுக்காக 9200 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று புத்தசாசன […]

e0ae85e0aea8e0af81e0aeb0 e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aea9e0af8d e0ae95e0af8ae0aeb3e0af8de0ae95e0af88e0aeaae0af8d e0aeaae0aebfe0aeb0 | Pathivu News செய்திகள்

அநுர அரசின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது

  • Dec 4, 2024 - 07:20 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று (03) காலை 9.30 மணி ஆரம்பமாகி மாலை 5.30 மணி வரையும், நடைப்பறெ;று இன்று ம (04) காலை 9.30 மணிக்கு மீள ஆரம்பமாகி ; மாலை 5.00 மணி வரையும் இரண்டு நாள் விவாதம் நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி […]

e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d e0ae95e0af88e0aea4e0aebfe0ae95e0aeb3e0af88 e0aeb5e0aebfe0ae9fe0af81e0aea4e0aeb2e0af88 | Pathivu News செய்திகள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்- சாணக்கியன்

  • Dec 4, 2024 - 02:23 PM
  • 0 Comments

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறுகின்றது. இதில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் கேள்வியெழுப்பினார் இதற்குப் பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன […]

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d 183 e0ae95e0aebfe0aeb2e0af8b e0ae95e0af87 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 183 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

  • Dec 4, 2024 - 01:22 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் 183 கிலோ கேரள கஞ்சாவுடன் படகொன்றை கடற்படையினர் இன்று (04) கைப்பற்றியுள்ளனர் ஆயினும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென தெரியவருகின்றது மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொதிகள் என்பன யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளன சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாப தெரிவித்துள்ளனர்    

e0ae92e0aeb0e0af81 e0aea4e0af81e0aeaae0af8de0aeaae0aebee0ae95e0af8de0ae95e0aebf e0aeaee0aebee0aea4e0af8de0aea4e0aebfe0aeb0e0aeaee0af87 | Pathivu News செய்திகள்

ஒரு துப்பாக்கி மாத்திரமே பாதுகாப்பிற்காக வழங்கப்படும் – பாதுகாப்பு அமைச்சு

  • Dec 4, 2024 - 01:13 PM
  • 0 Comments

நபர் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவில் பாதுகாப்பு […]

e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeafe0aebee0aeb5e0af81e0aeaee0af8d e0ae9ae0af80e0aea9 | Pathivu News உள்ளூர்

வடக்கில் இந்தியாவும் சீனாவும் முதலீட்டில் போட்டி?

  • Dec 4, 2024 - 10:28 AM
  • 0 Comments

இந்திய 15 முதலீட்டாளர்கள் 15 பேர் யாழ் வரவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும் வடமாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நேற்று (03) காலை ஆரம்பமானது . மூன்று நாட்கள் நடைபெறும் வட மாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் […]

e0ae85e0aea9e0aeb0e0af8de0aea4e0af8de0aea4 e0aea8e0aebfe0aeb2e0af88i e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8de0aeaae0aebee0aea9 e0ae9ae0aeaa | Pathivu News செய்திகள்

அனர்த்த நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இரவு 9.30 மணிவரை நடைபெறும்

  • Dec 4, 2024 - 09:05 AM
  • 0 Comments

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (4) மாலை. 05.30 மணி தொடக்கம் இன்று இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன இதன் அடிப்படையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று (4) காலை 9.30 மணி முதல் இன்று மாலை […]

e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0ae9ae0aebfe0aeaee0af8de0aeaee0aebee0ae9ae0aea9 e0ae89e0aeb0 | Pathivu News உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதியின் சிம்மாசன உரை மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது – சிறீதரன் எம்.பி

  • Dec 4, 2024 - 02:46 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (3) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், ‘ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. யுத்தம் காரணமாக வாங்கிய கடன்கள் காரணமாகவே நாடு […]

e0ae87e0aea9e0aeb5e0aebee0aea4e0aea4e0af8de0aea4e0af88 e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d e0aea8e0af8be0ae95e0af8de0ae95e0aea4 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இனவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த இடமளியோம் – நலிந்த ஜயதிஸ்ஸ

  • Dec 3, 2024 - 11:43 PM
  • 0 Comments

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp