உலகம் செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி!

  • Dec 23, 2024 - 02:33 AM
  • 0 Comments

பாலஸ்தீன நகரமான காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது. இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ள அதே வேளை 107,573 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. இந்நிலையில் நிலையில் வடக்கு காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலியப் […]

இந்தியா செய்திகள்

எங்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது-ஜெய்சங்கர்!

  • Dec 23, 2024 - 02:26 AM
  • 0 Comments

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திர சேக ரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது. […]

இந்தியா செய்திகள்

தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

  • Dec 23, 2024 - 02:19 AM
  • 0 Comments

தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைப்பெற்றது பரபரப்பான அரசியல் சூழலில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ; கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார். இதையடுத்து ‘ஒரே நாடு […]

உள்ளூர் செய்திகள்

அனலைதீவையும் அபிவிருத்தி செய்வதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி!

  • Dec 23, 2024 - 02:08 AM
  • 0 Comments

கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் அனலைதீவும் அபிவிருத்தி செய்யப்படுமென பிரதேசவாழ் மக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர். அதன்போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்துக்கூறப்பட்டது. அனலைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தாம் அறிந்துவைத்துள்ளதாகவும், குறிப்பாக […]

உள்ளூர் செய்திகள்

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

  • Dec 23, 2024 - 01:36 AM
  • 0 Comments

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பெசில் பெர்னாண்டோ எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இந்நாட்டில் சட்ட சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளை தினசரி விசாரணை […]

உள்ளூர் செய்திகள்

வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

  • Dec 23, 2024 - 01:29 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகிய இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 22.12.2024

  • Dec 23, 2024 - 12:25 AM
  • 0 Comments

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள் நோர்வே தூதுவர் பிரதமரை சந்தித்தார்   https://youtu.be/WKOY0revRak

உலகம்

ஆப்கனை அதிகாலையில் உலுக்கியது நிலநடுக்கம்

  • Dec 22, 2024 - 09:56 AM
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

உள்ளூர்

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன்

  • Dec 22, 2024 - 09:30 AM
  • 0 Comments

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ள முடிவில் மாற்றம் செய்யக்கூடாதென்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் அதனை ஏற்க முடியாது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் மாவை சோ.சேனாதிராஜா நீடிப்பதை அங்கீகரிப்பதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கும் பொருட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த 14 ஆம் திகதி […]

செய்திகள்

பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர்

  • Dec 21, 2024 - 09:16 PM
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களான, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு ; தெரிவித்தார். அத்துடன் கன்னங்கராவின் கல்விச் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp