உலகம் செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி!

பாலஸ்தீன நகரமான காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது.

இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ள அதே வேளை 107,573 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

இந்நிலையில் நிலையில் வடக்கு காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது.

இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசா நகரில் உள்ள மற்றொரு பள்ளிக்கூடம் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக வடக்கு காசாவில் ஜபாலியா அல்-நஸ்லாவில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இதையும் படியுங்கள்>எங்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது-ஜெய்சங்கர்!

https://www.youtube.com/@pathivunews/shorts

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்