முக்கிய செய்திகள்

நிராயுதபாணியானார் மகிந்தவின் 2வது புத்தா யோசித்த

  • Feb 1, 2025 - 07:14 PM
  • 0 Comments

அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி யோசித ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகளை ஆரம்ப கட்டத்தில் ஒப்படைத்திருந்தார் இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

ரோகிங்யா அகதிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அனுப்பி வைக்கமுடியாதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

  • Feb 1, 2025 - 07:00 PM
  • 0 Comments

மனித சமூகம் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக கூடிய நாட்டிற்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தடுத்துவைக்கபட்டுள்ள ரோகிங்யா அகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார் என கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பின் […]

முக்கிய செய்திகள்

மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு சுமந்திரன், அஞ்சலி செலுத்தினார்

  • Feb 1, 2025 - 06:07 PM
  • 0 Comments

அமரர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். கொழும்பிலிருந்து சுமந்திரன் யாழ் நோக்கி வரும் போது மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து வந்து மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.    

முக்கிய செய்திகள்

நாட்டில் சுகாதார சீர்கேட்டால் சிசு மரண வீதம்,எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு- கபில ஜயரத்தன

  • Feb 1, 2025 - 05:40 AM
  • 0 Comments

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளது. வருடம் தோறும் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் கபில ஜயரத்தன தெரிவித்தார். இலங்கை மருத்துவ சங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்போது வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ள அதே வேளை வருடாந்தம் […]

முக்கிய செய்திகள்

கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது

  • Jan 30, 2025 - 06:46 PM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், […]

முக்கிய செய்திகள்

பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

  • Jan 30, 2025 - 06:22 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் செய்யவுள்ள நிலையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டனர் இந்நிலையில் நேற்றுபுதன்கிழமைஇ நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்இ வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன்இ போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன்இ தற்காலிக சுகாதார உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் எஸ்.ஜெஸ்மின் ஆகிய ஐவரின் பெயரை குறிப்பிட்டு இ நாளைய தினம் யாழ்ப்பாண […]

இந்தியா

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு இம்முறை 2500 பேர் செல்ல முடிவு

  • Jan 30, 2025 - 08:11 AM
  • 0 Comments

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது. திருவிழா அழைப்பிதழானது யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் மூலம் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, ராமேசுவரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு […]

இந்தியா

18 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சிக்குட்படுத்தினால் இனி தமிழகத்தில் மரண தண்டனை

  • Jan 29, 2025 - 07:51 AM
  • 0 Comments

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை அடுத்து இன்று அரசிதழில் வெளியானது கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சட்டதிருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:- பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, […]

உலகம்

காங்கோ நாட்டின் சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்

  • Jan 29, 2025 - 07:35 AM
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு அடங்கலாக 7 மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிப்பு

  • Jan 28, 2025 - 09:13 PM
  • 0 Comments

இலங்கையில் காற்றின் தரக் குறியீடு இன்று முழுவதும் 58 முதல் 120 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலை வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அதே நேரத்தில் பிற பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருக்கும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp