உலகம்

காங்கோ நாட்டின் சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்

e0ae95e0aebee0ae99e0af8de0ae95e0af8b e0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0aebfe0aea9e0af8d e0ae9ae0aebfe0aeb1e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d | Pathivu News

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது.

எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர்.

இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர்.
இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

அப்போது சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த கைதிகள் அனைவரும் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இதில் சுமார் 6 ஆயிரம் கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp