உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் படையினரின் உயர் மட்டத்தினருக்குமிடையில் அவசர சந்திப்பு

  • Feb 25, 2025 - 06:07 PM
  • 0 Comments

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி தண்டனையாளன் சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணத்திற்கு வீட்டார் அழைப்பு

  • Feb 25, 2025 - 05:17 PM
  • 0 Comments

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம்

மட்டக்களப்பு மாணவியை தொடர்ந்து பரிஸ் நகரிலும் பெற்ற குழந்தையை தொப்புள் கொடியுடன் வீசியெறிந்த மாணவி

  • Feb 25, 2025 - 01:52 PM
  • 0 Comments

மாடியில் உள்ள ஒரு அறையில் பிரசவித்து, பின்னர் தனது குழந்தையை துணி சுற்றி கீழே வீசினார். ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்ட மாணவர் குழுவில் அப்பெண் இடம்பெற்றிருந்தார். 18 வயது அமெரிக்கப் பெண் ஒருவர், தனது பிறந்த குழந்தையை ஹோட்டல் ஜன்னலுக்கு வெளியே ‘தொப்புள் கொடியுடன்’ தூக்கி எறிந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கிழக்கு பாரிஸில் உள்ள போர்ட் டி மாண்ட்ரூயிலில் அமைந்துள்ள ஐபிஸ் ஸ்டைல்ஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 18 வயது மாணவியான அப்பெண் […]

உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் ஆண்டகைக்காக மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை!

  • Feb 25, 2025 - 01:44 PM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை மெல்ல தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி ஆயிரக்கணக்கானோர் பிராரத்தனை செய்த சம்பவம் வாடிகனில் அரங்கேறியது. அதன்படி வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் அருகே ஒன்று கூடிய மக்கள் […]

விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின 6வது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து

  • Feb 25, 2025 - 12:45 AM
  • 0 Comments

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின. நூணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஸான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ஓட்டங்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தன்ஜித் ஹசன் 24 பந்தில் […]

இந்தியா விளையாட்டு

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது

  • Feb 25, 2025 - 12:31 AM
  • 0 Comments

வங்கதேசம் இன்று நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும். முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் […]

இந்தியா உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தலைமன்னார் கடலில் மீண்டும் 32 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

  • Feb 24, 2025 - 11:50 AM
  • 0 Comments

தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தப்பியோடி தலைமறைவு வாழ்கையிலிருக்கும் படையினரை கைதுசெய்ய உத்தரவு – பாதுகாப்புச் செயலாளர்

  • Feb 24, 2025 - 10:30 AM
  • 0 Comments

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் செயற்படும் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உத்திகளை மேற்கொள்வதே பாதுகாப்பு அமைச்சின் முக்கிய நோக்கம் ஆகும். மேலும், பாதுகாப்பு செயலாளர் கொழும்பிலுள்ள தகவல் ஊடக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் 350 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • Feb 24, 2025 - 10:24 AM
  • 0 Comments

வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுஃ இது தொடர்பில் கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒ கைது செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 150 […]

உலகம் செய்திகள்

ஜெர்மனி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார் ஒலாப் ஸ்கால்ஸ்

  • Feb 24, 2025 - 02:02 AM
  • 0 Comments

ஜெர்மனியில் ஜனாதிபதி ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதியமைச்சரை ஜனாதிபதி ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஜனாதிபதி ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் போட்டியிட்டனர் இதற்கிடையே, எதிர்க்கட்சி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp