உள்ளூர் செய்திகள்

யாழப்பாணத்தில் 5ம் ஆண்டு மாணவியை தடியால் சின்னதாய் ஒரு தட்டு தட்டிய ஆசிரியர் கைது

  • Mar 28, 2025 - 11:13 AM
  • 0 Comments

பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் – 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அதனை […]

இந்தியா செய்திகள்

தமிழக மீனவர் பிரச்சினை 1974 ம் ஆண்டிருந்து தொடங்கியது என இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்

  • Mar 28, 2025 - 11:05 AM
  • 0 Comments

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில்இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவது குறித்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ‘இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன. 1996-ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீர்வாழ் வளச் சட்டம் மற்றும் 1979-ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்கு […]

செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செயதுள்ளது

  • Mar 28, 2025 - 10:56 AM
  • 0 Comments

சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இது கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன […]

உலகம்

ஹமாஸ் அமைப்பபை வெளியேறக் கோரி பாலஸ்தீன மக்கள் வீதிகளில் இரங்கி போராட்டம்

  • Mar 27, 2025 - 07:48 AM
  • 0 Comments

கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர். இரத்னனை தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது. காசா நகரம் முற்றாக […]

இந்தியா முக்கிய செய்திகள்

காதலியையும் காதலியின் தந்தையையும் சுட்டுக்கொன்ற இளைஞன் தற்கொலை

  • Mar 27, 2025 - 07:39 AM
  • 0 Comments

பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா தொடரூந்து ; நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் தொடரூந்து நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார். பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளை அழிக்குமாறு பாதுகாப்பு பிரதானிகளுக்கே நானே கட்டளையிட்டேன்- மகிந்த விசேட அறிக்கை

  • Mar 27, 2025 - 07:26 AM
  • 0 Comments

உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனக் குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டுப் போர் இடம்பெற்ற குறித்த காலத்தில் இலங்கையின் அப்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தாமே இருந்ததாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்தத் தாமே முடிவு செய்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். […]

முக்கிய செய்திகள் விளையாட்டு

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை வெற்றிக்கொண்டது

  • Mar 27, 2025 - 07:15 AM
  • 0 Comments

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரின் ; 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 29 ஓட்டங்களும் ரியான் பராக் […]

இந்தியா

சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்திய வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது

  • Mar 26, 2025 - 12:42 PM
  • 0 Comments

உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஸ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஸ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் […]

விளையாட்டு

ஐபிஎல் தொடரில்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் அணி

  • Mar 26, 2025 - 08:04 AM
  • 0 Comments

ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதற்கான நாணய சுழற்சியில் குஜராத் அணி தலைவர் சுப்மன் கில் வென்று களத்தடுப்பபை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ஓட்டங்கள் ; குவித்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் […]

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்கள் வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்

  • Mar 26, 2025 - 07:36 AM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இவ்வாறு இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதாக தெரியவருகின்றத முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டலை பெறுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp