சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்புரை
சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் என்றும், அவை யாருடைய அழுத்தத்துக்காகவும் நிறுத்தப்படக்கூடாது என்றும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். நேற்று (22-07) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சில உள்ளூராட்சி மன்றங்களில் முன்னேற்றம் காணப்படுவதைக் குறிப்பிட்ட ஆளுநர், மக்களுக்கான சேவையில் விரைவாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி போன்ற சேவைகளை விரைவாக வழங்குமாறும் கூறினார். […]









