உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகின்றார்களென ஜப்பானிய தூதுவர் தெரிவிப்பு

  • Apr 10, 2025 - 07:53 AM
  • 0 Comments

முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09-04) நடைபெற்ற ‘தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029’ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய […]

கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளரினால் பெண்யொருவர் பாலியல் துஷ்பிரயோகம்

  • Apr 9, 2025 - 01:09 PM
  • 0 Comments

அம்பாந்தோட்டை, சிறிபோபுர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாந்தோட்டை, சிறிபோபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று புதன்கிழமை (09) அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தபால் வாக்குச் சீட்டுகள் தயாராக உள்ளது

  • Apr 7, 2025 - 08:51 AM
  • 0 Comments

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்னாயக்க தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மகன் தாயை அடித்தே கொன்றுள்ளான்

  • Apr 7, 2025 - 08:42 AM
  • 0 Comments

வீட்டு வளாகத்தில் நேற்று (06-04) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கொலையுடன் தொடர்புடைய […]

இந்தியா உள்ளூர் செய்திகள்

இந்திய பிரதமரின் பணிப்புரைக்கமைய தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

  • Apr 7, 2025 - 08:35 AM
  • 0 Comments

இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ஆம் திகதி இலங்கை வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது […]

இந்தியா உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதியின் அலுவலகத்தில் பிரதமர்

  • Apr 5, 2025 - 12:17 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’ என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.

உள்ளூர் செய்திகள்

விரைவில் தமிழரசுக்கட்சியின் தமிழரசு தொடர்பகம் தோற்றம் பெறும்- சுமந்திரன்

  • Apr 5, 2025 - 07:14 AM
  • 0 Comments

அரசியலுக்கு அப்பால் மக்களின் சேவைகளை முன்னெடுப்பதற்கு விரைவில் தமிழரசு தொடர்பகம் திறக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (04) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் இறங்கினார் இந்தியப் பிரதமர்

  • Apr 5, 2025 - 06:54 AM
  • 0 Comments

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.33 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

  • Apr 3, 2025 - 07:21 AM
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் இணக்கம் எட்டப்பட்டதை அடுத்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்கான பிரிட்டனின் தடையை ஆராய அமைச்சரவை குழு நியமனம்

  • Apr 3, 2025 - 07:11 AM
  • 0 Comments

பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காகக் குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp