இந்தியா

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது – இலங்கை கடற்படை அராஜகம்

  • Jan 26, 2025 - 07:32 AM
  • 0 Comments

தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். தனுஸ்கோடி மற்றும் தலைமன்னார் கடற்ப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது. அத்துடன் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.  

முக்கிய செய்திகள்

திருமலையில் விபத்து, சாரதி உறக்கம், 2 குழந்தைகள், 3 பெண்கள்; உள்ளிட்ட 6 பேர் காயம்

  • Jan 25, 2025 - 04:44 AM
  • 0 Comments

திருகோணமலை சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா வாகனத்துடன் வேன் மோதி நேற்று (24) விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி 10 பயணிகளுடன் பயணித்த வேன் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்கு முன்னால் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந் டிமோ பட்டா வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் […]

செய்திகள்

யாழில் 14 வயது மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகம் செய்துள்ளார்

  • Jan 23, 2025 - 11:32 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 52 வயதுடைய ஆசிரியர்; நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சந்தேக நபரான ஆசிரியரை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியா

மனைவியை கொலை செய்து அவயங்களை வெட்டி குக்கரில் வேக வைத்த கணவன் கைது

  • Jan 23, 2025 - 08:02 AM
  • 0 Comments

ஐதராபாத்தில் மனைவியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 35 வயதுடைய தனது மகள் ஒருவாரமாக காணவில்லை என்று பெற்றோர் போலீசில் முறைப்பாடு செய்தனர் அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய போலீசாருக்கு பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று கணவனுக்கும் […]

செய்திகள்

பட்டபின்னும் திருந்தாத தமிழரசுக்கட்சி, மீண்டும் தமிழ் தேசியக்கட்சிகளிடையே முறுகல்

  • Jan 23, 2025 - 06:04 AM
  • 0 Comments

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. அதனையடுத்து , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் […]

உலகம்

சீனாவினதும் ரஸ்சியாவினதும் உறவுகளை வலுப்படுத்த ஜி ஜின்பிங் மற்றும் புட்டின் ஆலோசனை நடத்தியுள்ளனர்

  • Jan 22, 2025 - 07:38 PM
  • 0 Comments

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் உக்ரைன் போர் குறித்தும் ரஸ்சியாவையும் கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார். 2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஸ்சிய ஜனாதிபதி புதின் இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரஸ்சியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் […]

உலகம்

பூமியின் கடைசி நாடு நோர்வே என்றால் நீங்கள் நம்புவீர்களா?

  • Jan 21, 2025 - 07:05 AM
  • 0 Comments

பொதுவாக விடியல் வந்தால் நிச்சயம் இரவு வரும். மீண்டும் விடியும் என்பதுதான் தெரியும். ஆனால் இங்கு 6 மாதம் விடியல் மட்டுமே இருக்கும். அடுத்த 6 மாதம் இரவு மட்டுமே இருக்கும். இந்த நாடுதான் பூமியின் கடைசி நாடாகவும் உள்ளது. இப்படி 6 மாதம் பகலாகவும் 6 மாதம் இரவாகவும் இருக்கும் நாடான நார்வேயில் ஆர்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் என்ற தீவு பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகின்றோம். இங்கு பகல், இரவு 6 […]

இந்தியா

தமிழ்நாடு 10 இலட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது – அண்ணாமலை

  • Jan 21, 2025 - 06:51 AM
  • 0 Comments

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு 10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதை கட்டி முடிக்க இன்னும் பல ஆண்டுகளாகும். தி.மு.க. தமிழகத்தில் அடிப்படை தேவைகளுக்கு செலவு செய்வதில்லை. தேவையில்லாதவைகளுக்கு அள்ளித்தெளித்துக் கொண்டிருக்கிறது. நான் தமிழகத்திற்கு வந்திருப்பது அரசியலை தூய்மை செய்வதற்காக. 3 லட்சம் கோடி பட்ஜெட் போடுகிறார்கள் என்றால், 60 ஆயிரம், 70 ஆயிரம் கோடிகள் எதற்காக செலவு செய்கிறார்கள்? என்பதே தெரியவில்லையென அண்ணாமலை […]

முக்கிய செய்திகள்

வடகிழக்கில் இன்றும் மழைக்கான சாத்தியம்

  • Jan 21, 2025 - 06:14 AM
  • 0 Comments

மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும் யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும் திருகோணமலை – அடிக்கடி மழை பெய்யும் மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் […]

முக்கிய செய்திகள்

யாழில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

  • Jan 20, 2025 - 03:26 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp