விளையாட்டு

பஞ்சாப்புக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில்; குஜராத் களத்தடுப்பை தெரிவு செய்தது

  • Mar 25, 2025 - 07:56 PM
  • 0 Comments

ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான நாணய சுழற்சியின் போது குஜராத் அணி அணித் தலைவர் சுப்மன் கில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது

இந்தியா சினிமா

சுஷாந்த் சிங் மரணம் கொலையல்ல தற்கொலை- சி.பி.ஐ. அறிக்கை

  • Mar 23, 2025 - 08:39 AM
  • 0 Comments

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, சி.பி.ஐ. இந்த வழக்கை முடித்து வைத்தது. இது குறித்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14, 2020 அன்று சுஷாந்த் சிங் தனது பாந்த்ரா பிளாட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த இரண்டு வழக்குகளில் இறுதி அறிக்கையை […]

இந்தியா உலகம்

தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

  • Mar 23, 2025 - 07:29 AM
  • 0 Comments

  சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த […]

விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 174 ஓட்டங்களைப் பெற்றது.

  • Mar 22, 2025 - 09:41 PM
  • 0 Comments

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு! இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தலைமன்னாருக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்குமான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுமா?

  • Mar 22, 2025 - 09:32 PM
  • 0 Comments

இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, 14.10.2023-ல் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். கடந்த […]

உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் உடல்நிலை தேறியுள்ளது. ஒளிப்படம் வெளியிட்ட வாடிகன்

  • Mar 17, 2025 - 11:20 AM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து மூவர் காயம்

  • Mar 17, 2025 - 07:49 AM
  • 0 Comments

கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்று (16-03) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி முகமாலை இந்திராபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பளை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

இந்தியா விளையாட்டு

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக மீண்டும் சம்பியனானது

  • Mar 16, 2025 - 04:01 PM
  • 0 Comments

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் நேற்று (15-03) இரவு நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 149 ஓட்டங்களைத் தக்கவைத்து 8 ஓட்டங்களால் வெற்றியிட்டிய மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியன் மகுடத்தை சூடியது. 2023இல் ஆரம்பமான மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் முதலாவது அத்தியாயத்திலிருந்து தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் பங்குபற்றிவரும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி, மீண்டும் 2ஆம் இடத்ததுடன் திருப்தி அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவரக்ளில் […]

உலகம்

ஏமனின் ஹவுதிகள் மீது அமெரிக்கா நடத்திய கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு

  • Mar 16, 2025 - 09:28 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக நடத்திய முதல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஹவுதி அமைப்புக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் போது, ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது. இஸ்ரேலுக்கு எதிரான செயல்களை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தொடர் கொலைகளில் மற்றொன்று காலியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

  • Mar 14, 2025 - 08:39 PM
  • 0 Comments

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் இடம்தோட்டை பகுதியில் இன்று மாலை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் காயமடைந்த நபர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை, அத்துடன் சந்தேக நபர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp