முக்கிய செய்திகள்

டீஜிட்டல் ட்ரென்ட எம்பி அர்ச்சுனா 2 லட்சம் ரூபா பிணையில் விடுதலை

  • Jan 30, 2025 - 07:04 AM
  • 0 Comments

நேற்று மாலை (29-01-2025) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 20 ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ […]

முக்கிய செய்திகள்

வைத்தியரில்லாததால் முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலை நேற்று முடங்கியது

  • Jan 30, 2025 - 06:06 AM
  • 0 Comments

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் கடமையில் இல்லாததால் நேற்று (29) வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்து நோயாளர்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. ஊடனடியாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி மற்றொரு வைத்தியரை வைத்திய சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளார் அத்தோடு உடனடியாக வைத்தியசாலைக்கு நேரடியாகச்சென்று வைத்தியசேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியருடன் கலந்துரையாடியதுடன், வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வந்த பொதுமக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டு […]

முக்கிய செய்திகள்

தண்ணியில் தண்ணீரில் மீண்டும் மீண்டும் பாய்ந்தவர் காணாமல் போனார் – கிளிநொச்சியில் சம்பவம்

  • Jan 29, 2025 - 06:33 PM
  • 0 Comments

மதுபோதையில் ளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார். மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு அரசியல், சமூக செயற்பாட்டாளரான பீற்றர் இளஞ்செழியனை பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு

  • Jan 29, 2025 - 06:07 PM
  • 0 Comments

முல்லைத்தீவில் வசித்துவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான பீற்றர் இளஞ்செழியனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (29) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு – மணல் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பீற்றர் இளஞ்செழியனை எதிர்வரும் 01.02.2025 அன்று அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக 01.02.2025ஆம் திகதி […]

முக்கிய செய்திகள்

சஜித் பிரேமதாச தலைமையில் வலுவான எதிர்க்கட்சி கட்டியெழுப்படுகின்றது

  • Jan 29, 2025 - 05:58 PM
  • 0 Comments

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இன்று கூடி கலந்துரையாடினர் பலமான எதிர்க்கட்சியை உருவாக்கி, மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் அனைவரையும் ஒன்று திரட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக கட்சித் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அரசாங்கத்தின் சரியான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டுக்கும் […]

முக்கிய செய்திகள்

டிஜிட்டல் ட்ரென்ட் எம்.பி அர்ச்சுனா கைது

  • Jan 29, 2025 - 05:33 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது பின்னர் அனுராதபுரம் பொலிஸார் இந்த விடயம் குறித்து […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவை எழிற்சியூட்டுகிறார்

  • Jan 29, 2025 - 09:19 AM
  • 0 Comments

கடந்த கால கசப்புக்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர்) உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (27) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் […]

செய்திகள்

திட்டமிடப்பட்ட தடைகளாலேயே மலையகத்தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி; விசனம் தெரிவித்துள்ளார்

  • Jan 28, 2025 - 09:29 PM
  • 0 Comments

இலங்கையின் மலையகத் தமிழ்ச்சமூகம் கட்டமைக்கப்பட்ட பல்வேறு தடைகளுக்குத் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றார்கள். அதுவே அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ் விசனம் வெளியிட்டுள்ளார். சட்டம் மற்றும் சமூக நிதியம் மற்றும் இளம் ஆய்வாளர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (27) கொட்டகலை, ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் ‘மலையக மக்களின் கல்வி மற்றும் உரிமைகளுக்கான அணுகல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற மலையக ஆசிரியர்களின் ஆய்வு […]

செய்திகள்

விடைக்கான கணக்கை போடும் கஜேந்திரக்குமார், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமே சிறப்பானது

  • Jan 28, 2025 - 08:25 PM
  • 0 Comments

தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையே கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் ஒன்றிணைவது சாத்தியமில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (28) ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வரவுள்ள அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமையவுள்ளது நாடாளுமன்றில் அநுர தரப்பு அதீத பெரும்பான்மையுடன் உள்ளது. அவர்களுக்கு எமது தரப்பின் ஆதரவு தேவையில்லை. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் […]

முக்கிய செய்திகள்

ஜேவிபி அரசாங்கத்திற்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் ஊடாக மக்கள் பாடம் புகட்ட ஆரம்பித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

  • Jan 28, 2025 - 06:13 PM
  • 0 Comments

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அரசு நிறைவேற்றாது இழுத்தடிப்பு செய்து வருவதாக எதிர்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு தற்போது அரசு திணறுகின்றது வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கம்பஹா, மாவட்டத்தில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அநுரவின் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp