முக்கிய செய்திகள்

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீயணைப்பு கருவிகள் பலவருடங்களா இயங்காதது நேற்று தெரியவந்துள்ளது

  • Feb 14, 2025 - 06:04 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (13-02-2025 ) திடீரென எக்ஸ்ரே பிரிவில் தீ பரவியபோது, தீயினை கட்டுப்படுத்த வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்தியபோதும் அவை இயங்கவில்லை. அதனையடுத்து, நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் வைத்தியசாலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விசேட பெண்கள் மருத்துவமனை கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்புக் கருவிகளை கொண்டுசென்று, பயன்படுத்திய பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் காலாவதியான கருவிகள் இயங்காத காரணத்தால் தீயை அணைக்கும் முயற்சிகள் தாமதமானமை தொடர்பில் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். […]

முக்கிய செய்திகள்

குரங்கா மந்தியா மின்தடையை ஏற்படுத்தியது என அமைச்சர் பதிலளிக்க வேண்டுமென எதிர்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் கோரிக்கை

  • Feb 14, 2025 - 05:51 PM
  • 0 Comments

கடந்த வாரத்தில் ஏற்பட்டதை போன்று இந்த ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தெரியவருகிறது. அதனால் இதுதொடர்பில் மின்சக்தி அமைச்சர் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இடம்பெறுமா? இங்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் […]

முக்கிய செய்திகள்

அதானிகுழுமத்துடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகின்றதா?

  • Feb 14, 2025 - 05:23 PM
  • 0 Comments

காற்றாலை மின்திட்டம் குறித்து இந்தியாவின் அதானிகுழுமமும் இலங்கை அரசாங்கமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக்கொள்வதாக அதானி குழுமம் உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கமும் அதானிகுழுமமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன இதன் மூலம் காற்றாலை மின் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முற்றாக பூர்த்தியாகவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இருதரப்பும் அடுத்தவாரம் மூடியகதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமா என […]

முக்கிய செய்திகள்

வடமாகாணத்திற்கு இரவு தபால் தொடரூந்து சேவை இன்று தொடக்கம் ஆரம்பம்

  • Feb 14, 2025 - 05:11 PM
  • 0 Comments

வடக்குக்கான இரவு தபால் தொடரூந்து; சேவை இன்று முதல் மொரட்டுவை தொடரூந்து; நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் உள் விவகா ரங்களில் தலையிடுகின்றார் என சரத் வீரசேகர குற்றச்சாட்டு

  • Feb 14, 2025 - 06:43 AM
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். போராட்ட காலப்பகுதியிலும் அவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையில் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் […]

முக்கிய செய்திகள்

ஜேவிபி கட்சிக்க வருடம் 60 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டு வருகின்றதென தயாசிறி தெரிவித்துள்ளார்

  • Feb 14, 2025 - 06:34 AM
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க முன்னர் வரவு – செலவு திட்டம் விவாதம், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் மற்றும் தமிழ் – சிங்கள புத்தாண்டு உள்ளிட்ட காரணிகளை கவனத்தில் கொண்டு தீர்மானமொன்றை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் கூட்டணி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் […]

முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி ஏழ்மையான கட்சி என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்

  • Feb 14, 2025 - 06:22 AM
  • 0 Comments

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். ஐ.தே.க. மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும். எந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் சஜித் பிரேமதாசவே அதன் தலைவராவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நேற்று (13-02-2025) தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் […]

முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கு ரஸ்யா அடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்த இலங்கைக்கு ரஸ்யா பாராட்டு தெரிவித்துள்ளது

  • Feb 13, 2025 - 04:40 PM
  • 0 Comments

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்றுவருடங்களாகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கை பின்பற்றிய அணிசேரா கொள்கையை ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன்வரவேற்றுள்ளதுடன் புதிய அரசாங்கமும் இதேகொள்கையை பின்பற்றும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ரஸ்ய ஜனாதிபதிகளிடையிலான பேச்சுவார்த்தை இந்த மோதல் முடிவிற்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் லசந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விடுதலைக்கான பரிந்துரையை சட்டமா அதிபர் ரத்து செய்துள்ளார்

  • Feb 13, 2025 - 04:28 PM
  • 0 Comments

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த பரிந்துரையை தற்காலிகமாக இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கு கடிதம் மூலம் இன்று அறிவித்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டமை மற்றும் அவரது குறிப்பேடு காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி பரிந்துரை […]

முக்கிய செய்திகள்

ஜேவிபியின் யாழ் மாவட்ட எம்பிக்கள் நால்வரையும் ஒருவர் வெருளி என்கிறார் மற்றொருவர் வெங்காயமென்கிறார்

  • Feb 13, 2025 - 03:31 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாழ்மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்களிடம் இதுதான் நீங்கள் வழங்குகின்ற நீதியா என கேள்வி கேளுங்கள் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் வேண்டுகோள் விடுத்துள்ளார் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்க ஒருவர் இருக்கின்றார் ஜேவிபியின் பிரதான நபர் சந்திரசேகரன் என்று,இன்று அவர் அதிகாரம் படைத்த நபராகயிருக்கின்றார். தயவு செய்து அவரை எங்கே சந்தித்தாலும், இதுதானா உங்கள் நீதியா என […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp