உள்ளூர் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக உள்ளது அநுர அரசென்கிறார் சஜித் பிரேமதாச

  • Mar 21, 2025 - 03:27 PM
  • 0 Comments

கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கையால் மக்கள் சழரமத்தை எதிர்கொள்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் இரு தரப்பு கடன் உடன்படிக்கைக்கும், சர்வதேச பிணைமுறி தரகர்களுடன் உடன்படிக்கைக்கும் சென்று ஐ எம் எப் கூறுகின்ற வசனங்களுக்கு நடனமாடுகின்ற, ஐ எம் எப் இன் கைப்பாவையாக இந்த அரசாங்கம் உருவாகியிருப்பதாக் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார் பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு ஏப்ரல் 03 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

  • Mar 20, 2025 - 03:28 PM
  • 0 Comments

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]

செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆட்சேபனைகளை இன்று பிற்பகல் 1.30 மணி வரை தாக்கல் செய்யலாம்- தேர்தல் ஆணைக்குழு

  • Mar 20, 2025 - 01:30 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. இது தொடர்பான ஆட்சேபனைகளை இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணி வரை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

உள்ளூர் செய்திகள்

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்தில் பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்!

  • Mar 20, 2025 - 01:05 PM
  • 0 Comments

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக’ போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலுpகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் அதன்படி வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் இராஜஙாக் அமைச்சர்களான சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் இதேபோன்று […]

உள்ளூர் செய்திகள்

தேசபந்து தென்னக்கோனின் பெயரில் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை- நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம்

  • Mar 20, 2025 - 12:55 PM
  • 0 Comments

முன்னாள் பொலிஸ்மா அதிபர்தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்வதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கை போன்ற ஒன்றில் பொலிஸார் ஈடுபட்டனர் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தின் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனெரல் திலீபா பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.பிரபாகரனை தேடுவது போல . இவர் நேற்றுவரை தனது சமூக மத செல்வாக்கை பாவித்து கைதுசெய்யப்படுவதை தவிர்;த்து வந்தார். […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் 39 பட்டமளிப்பு விழாவில் 3,920 பேர் பட்டம் பெறுகின்றார்கள்

  • Mar 19, 2025 - 01:43 PM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறி சற்குணராஜா தலைமையில் இன்று ஆரம்பமாகியது. மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் பட்டமளிப்பு விழா ஆரம்பமாகிது. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார். இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை 13 அமர்வுகளாக நடைபெறவுள்ள […]

உள்ளூர் செய்திகள்

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது- பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

  • Mar 19, 2025 - 01:28 PM
  • 0 Comments

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 வைன் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதனை அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கைத்தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு பொன் விழா ஆண்டில் பட்டமளிப்பு விழா புதன்று ஆரம்பம்

  • Mar 17, 2025 - 06:02 PM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை (19-03) முதல் சனிக்கிழமை (22-03) வரை – நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதன் முழு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிறிதரன் எம்.பி கிளிநொச்சியில் வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தார்

  • Mar 17, 2025 - 05:50 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்று தாக்கல் செய்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், முன்னாள் தவிசாளர்களான அருணாசலம் வேழமாலிகிதன், சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்களின் பங்கேற்போடு, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அப்பா பொலிஸ் என்பதால் இலஞ்சம் பெற்ற மகனுக்கு விளக்கமறியல்!

  • Mar 17, 2025 - 05:44 PM
  • 0 Comments

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்தவகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp