உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர்கள் வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்

  • Mar 26, 2025 - 07:36 AM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இவ்வாறு இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதாக தெரியவருகின்றத முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையூட்டலை பெறுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர் […]

உள்ளூர் செய்திகள்

பிரிட்டனின் தடையால் பதறும் சிறிலங்கா கல்விச் சமூகம்

  • Mar 26, 2025 - 07:25 AM
  • 0 Comments

  நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக விதிக்கப்படும் தடையானது வருங்காலத்தில் நாட்டுக்கு எதிரானதாகக் கூட மாற்றமடையலாம். எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தீவிரமாக கரிசணை செலுத்த வேண்டும். மியன்மார், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நிலையில், எதற்காக இலங்கை மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக சட்டப்பிரிவின் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். கொழும்பில் நேற்று (25-03) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

9 ஐ நிராகரித்துவிட்டார்கள் இல்லாவிட்டால் அரனத்திலும் வென்றிருப்போம்-சங்கு சித்தார்த்தன்

  • Mar 26, 2025 - 07:14 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று (25-03) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரதேசபை தேர்தல் என்பது கிராம மட்டத்திலேயே உள்ள விடயங்களை கையாள்வதற்கு உரிய தேர்தலாகும் எனவே […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரித்தானியா தடை விதிப்பானது தமிழ் இளையோரின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்கிறது சர்வதேச மையம்

  • Mar 25, 2025 - 10:45 PM
  • 1 Comment

இலங்கையின் முன்னாள் படைத்தளபதிள் மீதான பிரித்தானியாவின் தடை விதிப்பு தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இராணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா தடை விதித்துத்துள்ளமை தொடர்பில் அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது, 2020 இல் நடைமுறைக்கு வந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

  • Mar 25, 2025 - 09:16 PM
  • 0 Comments

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள்

அர்ச்சுனா எம்.பி தான் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை குழப்பியதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

  • Mar 25, 2025 - 07:40 PM
  • 0 Comments

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார் என யாழ். ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வியாழேந்திரனை கைது செய்தது

  • Mar 25, 2025 - 05:47 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்த குற்றத்திற்கே சவேந்திர டி சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டது

  • Mar 25, 2025 - 05:30 PM
  • 0 Comments

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீதான தடைகளிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் ஆவணமே இவ்வாறு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வா சவேந்திர சில்வா தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மகிந்தவின் 2வது புத்தா பொலிஸ் நிலையத்pல் ஆஜர்

  • Mar 25, 2025 - 12:12 PM
  • 0 Comments

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21-03) இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோசிதவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21-03) இரவு யோசித ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது. இதன்போது, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிறையிலிருக்கும் தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டுணவு

  • Mar 25, 2025 - 11:56 AM
  • 0 Comments

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp