முக்கிய செய்திகள்

வடகிழக்கில் இன்றும் மழைக்கான சாத்தியம்

  • Jan 21, 2025 - 06:14 AM
  • 0 Comments

மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும் யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும் திருகோணமலை – அடிக்கடி மழை பெய்யும் மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு அரச வீடு இல்லை மாதம் 30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்- ஜனாதிபதி

  • Jan 20, 2025 - 05:47 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தை அரசுடமையாக்குவோம். அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும். வேண்டுமாயின் மாத வாடகை செலுத்தி அவர் அங்கு வசிக்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை பகுதியில் நேற்று (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் […]

செய்திகள்

தொடர் மழை காரணமாக கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

  • Jan 19, 2025 - 05:39 PM
  • 0 Comments

தற்போது நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை (25) நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

  • Jan 19, 2025 - 03:37 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்; மழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு நவகரி பிரதேசத்தில் 92 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாகரை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின இதனால் மக்களின் இயல்பு […]

செய்திகள்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது

  • Jan 18, 2025 - 06:39 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து இன்று (18) 38 வயதுடைய பிரதேசவாழ் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் இவரது உறவினர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இவர் இன்றைய தினம் அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்திற்கு அருகிலிருந்து இவரது துவிச்சக்கர வண்டி மற்றும் ஆவணங்கள் என்பவை பொலிஸாரால் […]

சினிமா

வெறியான நடிகை சமந்தா

  • Jan 18, 2025 - 07:32 AM
  • 0 Comments

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக அவர் உடல் எடை குறைந்து ஒல்லியாகி இருந்தது இதனை பலரும் விமர்சனம் செய்திருந்தனர் இதனால் அவரது உடலைப் பற்றி பலரும் கேலி செய்தனர் இதனால் கடும் கோபமுற்ற அவர் அவ்வாறு செய்தவர்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்து இருந்தார். அதாவது அவர்  anti-inflammatory    டயட் சாப்பிடுவதாகவும். அதனால் உடல் எடை ஏறாது என்றும், மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு […]

உலகம் செய்திகள்

2025 ம் ஆண்டு பாபா வங்காவின் கணிப்புக்கள் சில

  • Jan 18, 2025 - 07:16 AM
  • 0 Comments

பிறந்திருக்கும் புத்தாண்டு எப்படி அமையப்போகின்றது என எதிர்பார்ப்பு நமக்குள் இருக்கும். கடந்த 2024 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த மோசமான சம்பவங்கள் இந்த ஆண்டும் வரக்கூடாது என்று பலரும் பிராத்தணை செய்திருப்போம். தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85 சதவீதமான கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா. இவரின் கருத்துக்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. பாபா வாங்கா கணித்தவை 1. பிறந்திருக்கும் புத்தாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் பெரும் மோதல் வெடிக்கும், உலக நாடுகளின் பொருளாதார பாதிக்கப்படும், […]

முக்கிய செய்திகள்

கோட்டாவிடம் சீ.ஐ.டியினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்

  • Jan 17, 2025 - 08:32 PM
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (ஊஐனு) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ ஒன்றரை மணி நேரம் விசாரணைக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா

குளிர்பானத்தில் விசம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த காதலி

  • Jan 17, 2025 - 01:27 PM
  • 0 Comments

இந்தியாவின் கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியிலேயெ இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது சரோன் ராஜ் (வயது 23), பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார் இவர் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா (22) என்பவரை காதலித்து வந்தார். இவர் குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். காதலியின் வீட்டிற்கு காதலன் சென்ற போது காதலியும் அரவது பெற்றோரும் காதலன் குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்துள்ளனர் அதன் பின்னர் வயிற்றுவலி […]

முக்கிய செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

  • Jan 17, 2025 - 12:42 PM
  • 0 Comments

பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக விசாரணைகள் நடத்தப்பட்டு இதன் அடிப்படையில் மூன்று பணியாளர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஸானி ரோஹணதீரவின் பரிந்துரைக்கு அமைய குறித்த மூன்று பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அண்மையில் ஒப்புதல் வழங்கினார். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்ற […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp