செய்திகள்

கிளிநொச்சியில் மட்டும் உண்மை முகம் காட்டும் பொலிஸ் பயங்கரவாதம்

  • Jan 3, 2025 - 02:26 PM
  • 0 Comments

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் குறித்த கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ள தயாராக இருந்தது. இதன் போது அங்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் அனுமதி பெற்று கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக […]

செய்திகள்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய முனையும் கஜேந்திரகுமார்

  • Jan 3, 2025 - 07:31 AM
  • 0 Comments

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்வு திட்டம் குறித்து பேசுவதற்குரிய திகதியை முடிவு செய்யவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது, குறைந்தபட்சம் அவ்விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் […]

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு!

  • Jan 3, 2025 - 12:06 AM
  • 0 Comments

கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ரக வாகனம் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில்இ சம்பவத்தன்றே இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. தந்தை தாய் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்இ இன்றைய தினம் தாயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

உள்ளூர் செய்திகள்

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது- யாழ் வணிகர் கழகம்

  • Jan 2, 2025 - 11:24 PM
  • 0 Comments

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது அதில் எவ்வித சிக்கலும் இல்லை. இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். உள்ளூர் வெளியூர் அரிசிகளின் விலை மற்றும் தொடர்பிலான ஊடக சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலை […]

செய்திகள்

சிறை கைதிகள்,புலம்பெயர் தொழிலாளர்களின்,வாக்குரிமை உறுதி செய்ய வேண்டும்- தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

  • Jan 2, 2025 - 06:26 PM
  • 0 Comments

வெளிநாடுகளுக்கு புலம்பெயரந்து சென்றவர்கள் மற்றும் தொழில் நிமித்தம் ; சென்றவர்கள் அத்துடன் நாட்டில் உள்ள சிறைக் கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்யுறுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏலவே இது தொடர்பில் உத்தியோக பூர்வமான கடிதமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

நேபாள பிரதமரும் ரணில் விக்ரமசிங்கவும் சந்திப்பு!

  • Jan 2, 2025 - 04:14 PM
  • 0 Comments

நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்து கலந்துரையாடினார் இந்த சந்திப்பானது பலுவத்தாரில் அமைந்துள்ள நேபாள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, நேபாள-இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயணமாக டிசம்பர் 28 ஆம் திகதி நேபாளம் சென்றடைந்த ரயில் விண்ரமசிங்க, இன்று நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

செய்திகள்

கிளிநொச்சியில் 23 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

  • Jan 2, 2025 - 02:08 PM
  • 0 Comments

கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 45 வயதுடைய பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் சந்தேக நபர்களிடமிருந்து 23 கிலோ 165 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் […]

உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

  • Jan 2, 2025 - 01:49 AM
  • 0 Comments

நேற்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில், விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட உட்பட்ச எண்ணிக்கை ஆகும். மேலும் இதன்போது, போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக சட்டம் அமுல்படுத்தப்பட்ட சாரதிகளின் மொத்த எண்ணிக்கை 7,264 ஆகும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. […]

செய்திகள்

மக்களுக்கு சொன்னதை செய்யுங்கள் அநுரவுக்கு,நாமல் தெரிவிப்பு

  • Jan 1, 2025 - 09:56 PM
  • 0 Comments

கடந்த கால அரசாங்கங்களை விமர்சிக்காது நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அநுர அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் இராஜபக்ஸ தெரிவிததுள்ளார் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த கால அரசாங்கங்களை விமர்வித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ராஜபக்ஷர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை குறைப்பதால் பொருளாதார […]

செய்திகள்

பொதுமக்களை கொல்லவிரும்பவில்லையாம் – சவேந்திர சில்வா

  • Jan 1, 2025 - 01:01 PM
  • 0 Comments

அரகலயவின் போது ஆயுதமேந்தாத பொதுமக்களை கொலை செய்வதற்கு தான் விரும்பவில்லை, என ஓய்வு பெற்ற இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா தனது ஓய்விற்கு முன்னர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் 2022 அரகலய உட்பட தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ ஆபத்து ஏற்பட்டால் தேசத்தை பாதுகாப்பதற்காக தயாராகயிருக்கும் உத்தியோகபூர்வ இராணுவமே தேசத்தின் இராணுவம் என அவர் தெரிவித்துள்ளார். ஆவர் மேலும் தெரிவிக்கையில் 2022 எழுச்சி ஒரு உள்நாட்டு […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp