உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புதிய கடவுச்சீட்டிற்கு மேலதிகமாக 7000 ஆயிரம் ரூபா செலவுடப்படுகின்றதென முஜிபுர் எம்.பி குற்றச்சாட்டு

  • Mar 1, 2025 - 07:49 AM
  • 0 Comments

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (28-02-2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சஜித் பிரேமதாஸ ஊடகப் பேச்சாளரை இன்று நியமத்துள்ளார்

  • Feb 28, 2025 - 01:06 PM
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பிரசாத் சிறிவர்தனவுக்கான நியமனக் கடிதம் இன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

3 அழகிய அமெரிக்க யுவதிகள் கடற்கரை சொகுசு விடுதியில் மர்ம மரணம், அறையில் போதை மாத்திரைகள் மீட்பு

  • Feb 27, 2025 - 05:51 PM
  • 0 Comments

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவதிகள் அமெரிக்காவை சேர்ந்வர்கள் என கூறப்படுகின்றது. அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் பெலிசேவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அதீத போதை காரணமாக உயிரிழந்திருக்கலாம் குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சென் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென […]

விளையாட்டு

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் என்ற ஆண்டர்சனின் சாதனையை ஆர்ச்சர் முறியடித்துள்ளார்

  • Feb 27, 2025 - 10:14 AM
  • 0 Comments

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. லாகூரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 325 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 317 ஓட்டங்களின் போது சகலவிக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 8 ஓட்டங்கள்; வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்ட்டியில் இங்கிலாந்து […]

உலகம்

உக்ரைனுக்கு செய்த ஆயூத உதவிக்கு பதிலாக அமெரிக்காவுக்கு கனிமவளத்தை தாரை வளர்க்கின்றார் ஜெலன்ஸ்கி

  • Feb 27, 2025 - 10:11 AM
  • 0 Comments

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய ஜனாதிபதி; புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷியா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென ரவூப், மனோ, சுமந்திரன் இடித்துரைப்பு-

  • Feb 26, 2025 - 05:45 AM
  • 0 Comments

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அதேவேளை அச்சட்டத்தினை பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்குவது மிகமிக அவசியமாகும் என பயங்கரவாதச்சட்ட ஒழிப்பை நீண்டகாலமாகக் கோரிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜநாயகம் பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவஞ்சலி கூட்டம் நேற்று முன்தினம் (24-02-2025) மாலை […]

உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் ஆண்டகைக்காக மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை!

  • Feb 25, 2025 - 01:44 PM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை மெல்ல தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி ஆயிரக்கணக்கானோர் பிராரத்தனை செய்த சம்பவம் வாடிகனில் அரங்கேறியது. அதன்படி வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் அருகே ஒன்று கூடிய மக்கள் […]

விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின 6வது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து

  • Feb 25, 2025 - 12:45 AM
  • 0 Comments

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின. நூணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஸான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ஓட்டங்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தன்ஜித் ஹசன் 24 பந்தில் […]

உலகம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் சிறுநீரக பாதிப்பால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

  • Feb 24, 2025 - 08:51 AM
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் […]

இந்தியா

இலங்கை கடற்படைக்கெதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம்

  • Feb 24, 2025 - 08:44 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp