e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebf e0aeb5e0aebfe0aeb5e0ae9ae0aebee0aeafe0aebfe0ae95e0aeb3e0af81e0ae95e0af8d | Pathivu News செய்திகள்

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்து வழங்க நடவடிக்கை ரஷ்யா

  • Dec 13, 2024 - 09:29 PM
  • 0 Comments

அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட 55000 மெற்றிக்தொன் உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று கொண்டு வரப்பட்டன. குறித்த உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்தார்.

e0ae8ee0aeaee0aea4e0af81 e0ae85e0aeb0e0ae9ae0aebee0ae99e0af8de0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeafe0aebee0aeb0e0af8d | Pathivu News செய்திகள்

எமது அரசாங்கத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி

  • Dec 13, 2024 - 09:23 PM
  • 0 Comments

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம் என்றும் எமது அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார் அரச ஊடக பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்நாட்டு மக்கள் பல்வேறு அரசாங்கங்களை தெரிவு செய்தனர். பல அரசாங்கங்களை கவிழ்த்துள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக […]

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News செய்திகள்

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

  • Dec 13, 2024 - 09:15 PM
  • 0 Comments

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்த குறித்த பேரணியானது பசார் வீதியூடாக, வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து பிரதான வீதி ஊடாக சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தை அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தல் விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலை உளநல பிரிவு வைத்தியர் சுதாகரன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பி.எம்.குமார, வவுனியா பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ராகினி, சட்டத்தரணி […]

e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0ae87e0aeb0e0aebee0aeaee0aeb2e0aebfe0ae99e0af8de0ae95e0aeaee0af8d e0ae9ae0aea8e0af8d | Pathivu News உள்ளூர்

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கடமையினை பொறுப்பேற்றார்

  • Dec 13, 2024 - 10:47 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார் பதவியேற்பு நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான த மருதலிங்கம் பிரதீபன் உடனிருந்தனர் இதில் மேலதிக அரசாங்க அதிபர் திட்டமிடல் பணிப்பாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட […]

e0aeaee0aea9e0aebfe0aea4 e0ae89e0aeb0e0aebfe0aeaee0af88e0ae95e0aeb3e0af8d e0aeaee0af80e0aeb1e0aeb2e0af8de0ae95e0aeb3e0af8d e0aea4 | Pathivu News செய்திகள்

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் குற்றவாளிகளான கபில, உதயங்கவுக்கு எதிராக அநுர அரசு நடவடிக்கை எடுக்குமா? அமெரிக்கா

  • Dec 13, 2024 - 07:56 AM
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடையை அடுத்து உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராக இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகிய இருவருக்கும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (9) மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும் (10) முன்னிட்டு அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்துள்ளது. உலகளாவிய ரீதியில் […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 6 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…..! (காணொளி)

  • Dec 13, 2024 - 01:39 AM
  • 0 Comments

  தமிழர் தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகள் ஒன்றுபட் வேண்டும் வன்னி எம்;.பி.ப.சத்தியலிங்கம் காசை சேர்க்கிற வழியை பாருங்கோ- அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தொடர்பில் நாளை தீர்மானம்? சபாநாயகரின் கலாநிதி பட்டம் நிருபிக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரனை   https://youtu.be/YkgwkSfjkjo

e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0ae85e0aeb0e0ae9ae0af81e0ae95e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aea4 | Pathivu News செய்திகள்

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தொடர்பில் நாளை தீர்மானம்?

  • Dec 12, 2024 - 07:54 PM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மாவை சோ.சேனாதிராஜா எழுத்துமூலமாக கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் அனுப்பி வைத்திருந்தார். இருப்பினும் குறித்த காலப்பகுதி பாராளுமன்றத் தேர்தல் பிரசாரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருந்தமையால் மாவையின் கடிதம் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்றே கட்சியின் நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி மாவை […]

e0ae95e0aebee0ae9ae0af88 e0ae9ae0af87e0aeb0e0af8de0ae95e0af8de0ae95e0aebfe0aeb1 e0aeb5e0aeb4e0aebfe0aeafe0af88 e0aeaae0aebee0aeb0 | Pathivu News செய்திகள்

காசை சேர்க்கிற வழியை பாருங்கோ- அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

  • Dec 12, 2024 - 07:44 PM
  • 0 Comments

நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு அறிவுறுத்தினார். நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த, சுயாதீன நிறுவனம் என்ற வகையில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பு மற்றும் வசதிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையின் நிதிச் செயற்பாடுகளை செயற்றிறன் மிக்கதாக்குவதற்கு நல்லதொரு பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்புக்களின் […]

e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8d e0aea4e0af80e0aeb0e0af8de0aeb5e0af81 e0aeb5e0aebfe0ae9fe0aeafe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d | Pathivu News உள்ளூர்

தமிழர் தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகள் ஒன்றுபட் வேண்டும் வன்னி எம்;.பி.ப.சத்தியலிங்கம்

  • Dec 12, 2024 - 07:31 PM
  • 0 Comments

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வுகாணப்படவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும். இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும் இது தொடர்பாக எமது கட்சியின் மத்தியகுழுவில் ஆராய்ந்து உரிய […]

e0aeb0e0af8ae0aeb1e0aea9e0af8de0aeb0e0af8be0aeb5e0aebfe0aeb2e0af8d e0aea8e0af80e0aeb0e0af8d e0aeb5e0aebfe0aea8e0aebfe0aeafe0af8be0ae95 | Pathivu News உலகம்

ரொறன்ரோவில் நீர் விநியோக கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளது

  • Dec 12, 2024 - 07:26 PM
  • 0 Comments

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ வீட்டு உரிமையாளர்கள் மீது இவ்வாறு கட்டண அதிகரிப்பு விதிக்கப்பட உள்ளது. நீர் மற்றும் கழிவு நீர் என்பனவற்றிற்காக கட்டணங்களை 3.7 வீதத்தினால் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இந்த கட்டண அதிகரிப்பு மூலம் சுமார் 53 மில்லியன் டொலர்களை மேல் அதிகமாக ஈட்ட முடியும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp