இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 96,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இதுவரை 1,356 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயெ பதிவாகியுள்ளதுடன், அது சதவீத அடிப்படையில் 21.27% ஆகும்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 19,412 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,164 பேரும், களுத்துறையில் 6,212 பேரும், மாத்தறையில் 6,178 பேரும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?

