உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணியில் என்னை புதைத்து விட்டார்கள் எனக்கு நீதி கிடைக்குமா..? முன்பள்ளி விளையாட்டு விழாவில் சிறுவன் கோரிக்கை கண்கலங்கிய பார்வையாளர்கள்

semmani buried boy justice appeal preschool sports day | Pathivu News
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் மிக சிறப்பாக இடம்பெற்றது
இவ் நிகழ்வின் இறுதியில் வினோத உடை எனும் நிகழ்வு இடம்பெற்றது குறித்த நிகழ்வில் சிறுவர்கள் புனிதர்களின் வேடம் மற்றும் பலூன் வியாபாரி என வேடம் இற்று வந்த நிலையில் ஒரு சிறுவன் காரணமே இல்லாமல் என்னை பல ஆண்டுக்கு முன்னர் என்னை அம்மாவின் மார்பில் பால் அருந்திய கண்கொண்டு இருக்கும் போது என்னை புதைத்து விட்டார்கள் எனக்கு நீதி கிடைக்குமா என வினோத உடை தரித்து வந்த சம்பவம் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினரிடம் நெகிழ்ட்சியை ஏற்படுத்தி உள்ளது
தம்முடைய இறப்புக்கு நீதி கேட்ட சிறுவன் விருந்தினர் நீங்கள் யாராக வந்துள்ளீர்கள் என கேள்வி கேட்கும் போது சிறுவன் காரணமே இல்லாமல் செம்மணியில் என்னை புதைத்தார்கள் என பதிலளிக்க விருந்தினரின் கண்களில் கண்ணீர் சிந்த தொடங்கியது
பின்னர் ஏன் இப்போது வந்துள்ளீர்கள்….. என கேள்வி கேட்க என் இறப்புக்கும் என்னை போல் புதைக்கப்பட்ட வருக்கும் நீதி கேட்டு வந்துள்ளேன் அதனை தொடர்ந்து எங்கு இருந்து வந்துள்ளீர்கள்… என கேள்வி கேட்க எமக்கான நீதி இந்த அரசாங்கம் தரும் என கூறி எனுடன் புதைக்கப்பட்ட நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள் என தனது மழலை குரலால் பதிலளித்தார்
அதனை தொடர்ந்து விருந்தினர் எங்கு இருந்து வந்துள்ளீர்கள். என அடுத்தடுத்து கேள்வியை கேட்கும் போது. எமக்கான நீதி இந்த அரசாங்கம் தரும் என கூறி எனுடன் புதைக்கப்பட்ட நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள் என செம்மணி மனித புதைகுழி க்கான நீதி இந்த அரசாங்க கால கட்டத்தில் கிடைக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்
பின்னர் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என மனம் உடைந்த நிலையில் விருந்தினர் கேட்கும் போது உங்கள் பிள்ளைகள் நாங்கள் ஏன் எதற்கு என்றே தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்த போது என்னை புதைத்தார்கள் எமக்கான நீதியை அநுர மாமாவிடம் வாங்கி தாருங்கள் என உணர்வு ரீதியாக கேட்கும் போது பார்வையாளர்கள் மத்தியில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
குறித்த நீதி கேட்ட சிறுவன் தன் உடைகள் முழுவதும் பல பதாகைகளை ஒட்டிய வண்ணம் காட்சி அளித்தார் பதாகைகளில் கூறப்படும் விடயங்கள் பின்வருமாறு
என் சின்னஞ்சிறு பாதங்களால் ஓடிப்பிடித்து விளையாட வேண்டிய வயதில், என்னை மண்ணுக்குள் புதைத்துவிட்டார்களே!”
“புதுமையான, அமைதியான யாழ்ப்பாணத்தை என் கண்களால் பார்க்க முடியாமல் போய்விட்டதே!”
“தாயின் மார்பில் பால் அருந்தக் காத்திருந்த எனக்கு, அடுத்து என்ன நடந்தது என்றே தெரியவில்லையே!”
“அம்மா அமைத்துத் தந்த வண்ணக் கனவுகளோடு உறங்கச் சென்ற என்னை, இருண்ட மண்ணுக்குள் உறங்க வைத்துவிட்டார்களே!”
“நாங்கள் செய்த பாவம் தான் என்ன? ஐந்து வயதுக் குழந்தைக்கு மரண தண்டனை விதித்தது யார்?”
“என்னைப்போல் மண்ணில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிஞ்சுகளுக்கு இறுதிவரை நீதி கிடைக்காதா?”
“விளையாட்டுப் பொம்மைகளைக் கையில் வைத்திருக்க வேண்டிய வயதில், எங்கள் எலும்புகள் மண்ணுக்குள் கிடக்கின்றனவே!”
“ஒரு தலைமுறையின் கனவுகளையும் சந்ததியையும் ஒரே அடியில் அழித்துவிட்டார்களே, இது நியாயமா?”
“அன்றாடப் பள்ளிக்கூட மணிச்சத்தம் கேட்க வேண்டிய எனக்கு, அமைதியான சுடுகாட்டின் அமைதி மட்டுமே மிஞ்சியதா?”
“தாயின் அரவணைப்பையும் தகப்பனின் நேசத்தையும் அனுபவிக்க விடாமல் எங்களை ஏன் பிரித்தார்கள்?”
“என் சிரிப்புச் சத்தம் கேட்டிருக்க வேண்டிய வீடுகளில், இன்று என் நினைவுகள் மட்டுமே கண்ணீராக வாழ்கின்றன.”
“உலகமே அமைதியைப் பற்றிப் பேசும்போது, எங்களைப் போன்ற பிஞ்சுகளின் கதறல் யார் காதிலும் விழவில்லையா?”
“காலங்கள் உருண்டோடினாலும், இந்தச் செம்மணி மண் சுமக்கும் எங்கள் வலிகளுக்கு என்றுதான் விடிவு வரும்?”
“எங்கள் உயிரைப் பறித்தவர்கள் சுதந்திரமாக வாழும்போது, நியாயம் கேட்கும் எங்கள் குரல் மட்டும் ஏன் காற்றில் கரைகிறது?”
“நாங்கள் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையைத் திரும்பத் தர முடியாது; ஆனால் எமக்கான நீதியையாவது இந்த உலகம் தருமா?”
என கேள்வியாக கேட்க பட்டு இருந்தது
இச் நெகிழ்ச்சி ஊட்டும் சம்பவம் தற்போது சமூக மட்டத்தில் மட்டுமன்றி அரசியல் தரப்பிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
பூ.லின்ரன்
வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1112249274626638

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊