உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட நீலப்பையும்.. ராஜ் சோமதேவாவின் நீண்ட கறுப்பு அறிக்கையும்..!

semmanais recovered blue bag and raj somadevas lengthy black report | Pathivu News
மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் கண்டனம்.
தமிழ் மக்களின் இரத்தமும், சதையும் இரண்டறக் கலந்த செம்மணி மனித புதைகுழியின் நீதியை முழுமையாக குழி தோண்டி புதைத்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நீண்ட திட்டத்துடன் செயற்பட்ட சிங்கள தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் நீண்ட கறுப்பு அறிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக பிரபல அரசியல் விமர்சகரான மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜ் சோமதேவாவின் கறுப்பு அறிக்கை தொடர்பில் பல முரண்பாடுகளையும், பல கேள்விகளையும் எழுப்பி
மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அவ் அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
சிங்கள பேராசிரியர் ராஜ் சோமதேவா செம்மணி மனிதப் புதை குழி தொடர்பான இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்கி இருந்தார்.
சுமார் 170 பக்கங்களைக் கொண்ட குறித்த இடைக்கால அறிக்கை குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நீண்ட திட்டத்துடன் வெளியிடப்பட்ட ஒரு கறுப்பு அறிக்கையாகவே பார்க்கிறேன்.
ஈழத்தில் தமிழ் மக்கள் பல்வேறு கால கட்ட பகுதிகளில் சிங்கள பேரினவாதத்தினால் வேட்டையாடப்பட்டு இரத்தமும், சதையுமாக குற்றியிர்களாக மண்ணில் புதைக்கப்பட்ட வரலாறுகள் தொடர்கதையாக எழுதப்பட்டிருக்கின்றன.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் சிங்கள தேசத்தினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் இன்றுவரை நீதியைப் பெற்றுக் கொள்ள முடியாத கண்ணீருடனேயே காணப்படுகின்றனர்.
இந்த ஒரு சூழ்நிலையில் செம்மணி மனிதப் புதைககுழியில் சுமார் 580 வகையான மனித எலும்புக்கூடுகள் வெளிவந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மட்டுமல்ல மனிதநேயம் கொண்ட அனைவரின் நெஞ்சகளையும் உறையவைத்துள்ளது.
இலங்கையில் சுமார் 17 மனிதப் புதைகுழிகள் திறந்த நிலையில் அகழ்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் செம்மணி மனிதப் புதைகுழி பாரியதொரு மனிதப் புதைகுழியாக கருதப்படுகிறது.
இந்தப் புதை குழியின் அகழ்வுக்கு பொறுப்பாக இருந்த சிங்கள பேராசிரியர் ராஜ் சோமதேவா யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு வழங்கிய செம்மணி இடைக்கால அறிக்கை ஒரு கறுப்பு அறிக்கை.
அவரது அறிக்கையில் முரண்பாடானதும் மறைக்கப்பட்ட பல விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு மானுட உணர்வுகொண்ட அனைவருக்கும் இருக்கிறது.
முதலிலே அவர் வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் செம்மணியை மனிதப் புதைக்குழி என கூறாமல் செம்மணி புதைகுழி என கூறி இருக்கின்றமை கறுப்பு அறிக்கையின் பிள்ளையார் சுழி எனலாம். மேலும் அவர்து அறிக்கையின் பிரகாரம் செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொற்று நோய் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் எந்த ஆண்டிலாவது இவ்வாறு பாரிய அளவிலானோர் தொற்று நோய் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் இறந்தார்கள் என்பது எந்த ஒரு வைத்தியசாலைகளிலும் பதிவுகள் இல்லை.
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் காலப் பகுதியை சரிவர கூற முடியாது எனக் கூறும் சிங்களத்தின் கைக்கூலி ராஜ் சோமதேவா விடமும் தமிழ்த் தேசியவாதிகள் என தம்மைத் தானே கூறிக் கொள்ளும் வடகிழக்கு அரசியல்வாதிகளிடமும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
செம்மணியில் பல சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட நீல நிற அரச சார்பற்ற நிறுவனம் வழங்கிய புத்தகப் பையை உங்கள் அகழ்வு குழுவினர் மீட்டனர்.
குறித்த புத்தகப்பை தொடர்பான செய்திகள் அச்சு ஊடகங்களிலும், இலத்திரன்கள் ஊடகங்களிலும் பரவலாக வெளிவந்த நிலையில் குறித்த நீல நிற புத்தகப்பை 1995 பின் யுத்த காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை யாவரும் அறிந்தது.
ஆனால் ராஜ் சோமதேவா நீல நிற புத்தகப் பையின் காலப்பகுதியை மறைத்து தனது கறுப்பு அறிக்கை மூலம் நீதிமன்றத்தையே ஏமாற்ற முனைந்துள்ளார்.
செம்மணி சூனியப் பிரதேசம் யுத்த காலத்திலும் யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் சிறீலங்கா இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதி என்பது உலகறிந்த உண்மை.
திரு சாந்தி முதல் பல பெண்கள் சிறுவர்கள் வேட்டையாடப்பட்டு இரத்தமும், சதையுமாக புதைக்கப்பட்ட பிரதேசம் செம்மணி.
இந்த உண்மையை அக்கால பகுதியில் இராணுவ கோப்ரலாக இருந்த சோமராட்ன தனது வாக்குமூலத்தில் சுமார் 600 வகையான தமிழ் மக்களை அங்கு புதைத்தோம் என சிறீலங்கா நீதிமன்றிலே ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியிருக்கிறார்.
ஒரு மரண விளிம்பில் இருக்கின்ற சிங்கள இராணுவ சிப்பாயின் மனதில் இருந்து உண்மையான விடயங்கள் அம்பலமாகியுள்ள நிலையில் பணத்துக்கும், பதவிக்குமாக ராஜ் சோமதேவா தனது தொல்லியல் நுண்ணறிவை நீதிக்குப் புறம்பாக ஏன் பயன்படுத்தினார்?
ஆனால் ராஜ் சோமதேவாவின் கறுப்பு அறிக்கையில் செம்மணி யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசம் என்பதை கூட கூற முடியாத சிங்கள மேலாதிக்கத்தின் நலனை காப்பவராக இருந்திருக்கிறார்.
செம்மணி சிந்துபாத்தி மயானம் இந்துக்களின் சமய முறைப்படி இடம் பெறும் ஒரு மயானமாக நல்லூர் பிரதேச சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு மயானம்.
ராஜ் சோமதேவாவின் கறுப்பு அறிக்கையில் குறித்த மயானம் இந்துக்களின் மயானம் என்பதை மறைத்தது மட்டுமல்ல இந்து சமய முறைப்படி உயிரிழந்தவர்களை குவியல்களாக புதைக்க மாட்டார்கள் என்பதை கூட அறியாதவராக இருந்திருக்கிறார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட பின்னர் ஒரு காத்திரமான அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் குறித்த மனித புதை குழயில் குவியல்களாக காணப்படுகின்ற என்புக் கூடுகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படுவதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியது.
அதுமட்டுமல்லாது செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் வெளிநாட்டு நிபுணத்துவங்கள் தேவைப்படுமானால் அது தொடர்பில் ஆணைக்குழு தனது பரிந்துரையை வழங்கும் எனவும் அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை காத்திரமான செய்தியை வழங்கி இருக்கின்ற நிலையில் ராஜ் சோமதேவா சிறீலங்கா அரசாங்கத்தையும், சிங்கள இராணுவத்தையும் காப்பாற்றும் உள்நோக்குடன் தனது கறுப்பு அறிக்கை தனது அறிவை தந்திரமாக கையாண்டுள்ளார்.
சரி அவரது அறிக்கை பல்வேறு குளறுபடிகள் மத்தியில் வெளிவந்திருக்கின்ற நிலையில் ரணில் ஆட்சியை காப்பாற்றிய தமிழ் தரப்பு மதில் மேல் பூனைகளாக இருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை காப்பாற்றுவதற்கு படாது பாடுபட்ட தமிழ் தேசியத் தரப்புக்கள் செம்மணி விவகாரத்தில் ஓரணியாக நிற்பதை கூட தவிர்த்து வருகிறார்கள்.
தமிழ் மக்களை மந்தைகளாக்கி தேர்தல் காலங்களில் உசுப்பேற்றி வாக்கு வேட்டைகளில் ஈடுபட்டு வரும் தமிழ்த் தேசிய தரப்புக்கள் ராஜ் சோ மதேவாவின் கறுப்பு அறிக்கை தொடர்பில் தூதரகங்களை ஏன் ஓரணியில் நின்று சந்திக்கவில்லை.
தமிழ் இளைஞர், யுவதிகள் முள்ளிவாய்க்கால் கொடூர படுகொலையின் பின்னாவது எமக்கான நீதிப் போராட்டத்தின் அறிவுசார் பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் அதை நாம் செய்ய தவறிவிட்டோம்.
ஒரு மனிதப் புதைகுழியை ஆய்வு செய்யும் நிபுணத்துவத்தை வடகிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகளின் கையில் இல்லாததன் விளைவு தான் சிங்கள பேரினவாதி ராஜ் சோமதேவாவின் மூளைக்கு செம்மணி புதைகுழியின் ஆய்வுப்பணி சென்று இருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கம் நிபுணத்துவம் வாய்ந்த தமிழர் ஒருவரை நியமிக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாக இருந்தாலும் நாங்கள் நிபுணத்துவத்வமானவர்கள் இல்லை என்பதால் சோமதேபாவின் கறுப்பு அறிக்கை துறை சார்ந்து விமர்சிக்க முடியாத பாவப்பட்ட இனமாகவுள்ளோம்.
தமிழினம் ஒன்றை சிந்திக்க வேண்டும் தம்மை தாமே ஆளுகின்ற அதிகாரம் என்பது வெறுமனே அரசியல்ரீதியாக அல்ல அந்த இனத்துக்கு
இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க துறை சார்ந்து நிபுணத்துவத்தை பெற்றிருக்க வேண்டும்.
ஆகவே தமிழ் மக்கள் இனியாவது சிந்தியுங்கள் எமது இனத்தின் நீதிக்கான போராட்டம் முள்ளிவாய்க்காலுடனோ அல்லது செம்மணியுடனோ முடிவடையப் போவதில்லை சிங்கள பேரினவாதம் தமிழ் இனத்தை ஆயுதங்களால் மட்டுமல்ல அறிவு சார்ந்தும் வேட்டையாடுகிறது. என்று சண் மாஸ்டர் தனது அறிக்கையில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊