மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.
மேலும், வீடுகளிலிருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/4625324004405425
What’s your Reaction?

