2025 ஆம் ஆண்டு PSDG வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் இஸ்லாமிய சமூக கலாசார மரபு அமைப்பிற்கான கலாசார ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை(12.02.2026) இறக்காமம் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் என். எப். அய்மா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலக கணக்காளர் எம். ஆர். நசீமுல் ஹக், கலாசார உத்தியோகத்தர் ஏ. டப்ளியு. நாளிகா தமயந்தி, திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகாத்தர் ஏ.எல். பாத்திமா சப்றானா, விடய உத்தியோகத்தர் எம். பாத்திமா சுஜாஆ, நிதி உதவியாளர் பி.எம். ஆசீர் மற்றும் பெறுகை நடைமுறை உத்தியோகத்தர் ஐ. எல். றிஹானுல் ஹஸன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

