யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டு முதல் யாழ்ப்பாணத்திலையே தமது விரலடையாளங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஓய்வூதியதாரர்கள் தமது விரலடையாளங்களைப் பதிவு செய்வதற்காக அநுராதபுரம் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்கும் நோக்கில், ஓய்வூதியத் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது
இதற்கமைய, 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்கள் தமது சொந்த மாவட்டமான யாழ்ப்பாணத்திலேயே விரலடையாளங்களைப் பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரச சேவைகள் மக்களைச் சென்றடைவதுடன், அவை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்தார்.
What’s your Reaction?

