உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவில் 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா..!

205th annual flag raising festival at kalmunai nagore andavar dargah | Pathivu News
கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவில் 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா
நவம்பர் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவம்பர் 22 வரை கோலாகலமாக நடைபெற ஏற்பாடு
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃபில், அஸ்-ஸையித் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் நினைவாக நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.
இப் புனிதமிக்க கொடியேற்ற பெருவிழாவானது 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, தொடர்ந்து 12 நாட்கள் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளுடன் நடைபெற்று 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடையும்.
நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களும் பக்தர்களும் வருகை தரும் இக் கொடியேற்றத் திருவிழாவானது, யாத்திரை ஆணைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, 1963 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதிய 13529 ஆம் இலக்க இலங்கை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகவும் உத்தியோகபூர்வமாக ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் வருடாந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொடியேற்ற விழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பிராந்திய அரச நிறுவனங்கள், கல்முனை மாநகர சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து தர்கா நிருவாக சபையினர் விரிவாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நிருபர்
பாறுக் ஷிஹான்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊