போசாக்கு மாதத்தை முன்னிட்டு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் இன்றைய தினம் நெல்லியடியில் இடம்பெற்றது.
நெல்லியடி பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் போசாக்கு விழிப்புணர்வு பேரணியை ஆரம்பித்துவைக்க நெல்லியடி சந்தியிலிருந்து ஆரம்பமாகி நெல்லியடி மத்திய கல்லூரி ஊடாக வதிரி சந்தியை சென்றடைந்து அங்கிருந்து மாலை சந்தை வழியாக சென்ற பேரணி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தை சென்றடைந்தது அங்கு போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பணியாளர்கள், பாடசாலைகளின் மாணவர்கள், பிரதேச முன் பள்ளிகளின் ஆசிரியர்கள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ச.திரவியராஜா மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பிரியந்தி செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு அம்சமாக பழங்கஞ்சி வழங்கப்பட்டதுடன் போஷாக்கான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதே வேளை போசாக்கு விழிப்புணர்வு தொடர்பான வீதி நாடகங்களும் பேரணி கடந்து வந்த பாதையில் காணப்பட்ட பாடசாலைகள் முன்பாக இடம்பெற்றது இதேவேளை விழிப்புணர்வு தொடர்பான கருத்துரைகளை யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கீதீஸ்வரன் வழங்கினார்.

What’s your Reaction?

