முல்லைதீவு மாவட்டத்திற்கு நேற்றைய தினம்(24.11.2026) விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதனடிப்படையில்போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தப்படும் அனர்த்த மீள் கட்டமைப்பு மற்றும் கிராமிய வீதி திட்டத்தின் கீழ் கள்ளப்பாடு கடற்கரை பிரதான வீதி மற்றும் வற்றாப்பளை இரண்டாம் குறுக்கு வீதி ஆகியவற்றின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் செ. திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சுஜீபா, கரைத்துறைபற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. இமக்குலேட்ரா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




