வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோன் அவர்களுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
ஆளுநர் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில், மேஜர் ஜெனரல் வீரக்கோன் அங்கு பணியாற்றியிருந்தார். அக்காலப்பகுதியில் இருவரும் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை இச்சந்திப்பின்போது நினைவுகூர்ந்தனர்.


