உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28.05.2026) காலை 8.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை